Wednesday, June 19, 2013

அஞ்சலி



சைக்கிள் பெடரேஷன் ஆப் இந்தியாவின் சார்பில் ஜூனியர் தேசிய குழுவின் சைக்கிள் போட்டி பயிற்சியாளராக பணியாற்றி வந்த ருமா சட்டோபாத்யாய் (50 ) நொய்டாவில் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.நேற்று காலை 6 மணி அளவில் நொய்டா அதிவிரைவு சாலையில் மாணவ-மாணவியர்கள் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ருமா மற்றும் இரண்டு பயிற்சியாளர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்று, கண்காணித்தனர்.அப்போது எதிரே வந்த கார் ஒன்று ருமா மீது பலமாக மோதியது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையறிந்ததும் காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த ருமாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.ருமா சர்வதேச சைக்கிள் போட்டிகளில் மூன்று முறை இந்தியாவின் சார்பில் பங்கு பெற்றுள்ளார். ஏசியன் கேம்ஸ், ஏசியன் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் ஏழு முறை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் சைக்கிள் பந்தய குழுவினரின் பயிற்சியாளராக அவர் பங்குகொண்டார்.ருமா கொல்கத்தா தொலைபேசி மாவட்டத்தில்   ஒரு மூத்த கணக்காளர் ஆக பணியாற்றுகிறார் .ரூமா அவர்கள் கொல்கத்தா தொலைபேசி மாவட்ட கிளையில்   பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் துணை தலைவர் ஆக உள்ளார் .ருமாவின் மறைவு அவர் சார்ந்த சைக்கிள் பந்தய குழுவினருக்கு மட்டுமில்லாமல், விளையாட்டு உலகத்திற்கும் ,நமது    பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும் பெரிய இழப்பாகும். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...