இன்று காலை 10 மணி அளவில் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் SAVE BSNL கருத்தரங்கம் தொடங்கியது .தோழியர் கீதா அவர்கள் தேசிய கொடியை ஏற்ற ,நமது சங்க கொடியை மூத்த தோழரும் OCB கிளை செயலருமான தோழர் ஜெயபாண்டியன் ஏற்றி வைக்க ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை தோழர் மூக்கன் அதிர் வேட்டு முழங்க ஏற்றி வைக்க எழுச்சி மிகு கோஷங்களை தோழர் ரசூல் எழுப்ப மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமை தாங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கருத்தரங்கை முறையாக துவக்கி வைத்தார் .AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் T ராதாகிருஷ்ணன் , NFTE மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் .M அய்யாசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .சிறப்புரை நிகழ்த்திய நமது அன்பு தோழரும் ,அனைத்திந்திய சங்கத்தின் உதவி பொது செயலரும் ,நமது தமிழ் மாநில சங்கத்தின் தலைவரும் ஆன தோழர் .S .செல்லப்பா தனது உரையில் BSNL நிறுவனம் எதிர் நோக்கி உள்ள பிரச்சனைகளையும் , பொது துறைகளை பலவீனப்படுத்தும் மத்திய அரசின் அரசின் போக்கையும் ,தனியார் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் போக்கையும் குறிப்பாக வோடபோன் நிறுவனத்திற்கு 11,000 கோடி வரி சலுகை கொடுத்த மத்திய அரசு நமது BSNL நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்ததற்கு அளிக்க வேண்டிய 6300 கோடி ரூபாயை தராமல் திட்டமிட்டு BSNL ஐ முடக்கிட நினைக்கும் போக்கை சுட்டி காட்டினார் .வர உள்ள போராட்டங்களை 100% பங்கேற்புடன் செய்தால் மட்டுமே இன் நிறுவனத்தை காத்திட முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார் . BSNL நிறுவனத்தை 47% பங்கு விற்பனை செய்யப்பட்ட மற்றும் கடன் அதிகம் உள்ள MTNL நிறுவனத்தோடு இணைப்பது என்பது இன் நிறுவனத்தை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என நினைவூட்டினார் . ஆணாதிக்க இவ் உலகில் பெண்கள் படும் இன்னல்களை குறிப்பிட்ட அவர் வலுவான இயங்கங்கள் மூலமே இன் நிலையை மாற்ற முடியும் என்பதை உலக மகளிர் தின செய்தியாக கூறினார் .தோழர் செல்லப்பா வின் எழுச்சி மிகு உரை ஊழியர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது . அடுத்து பேசிய CITU சங்கத்தின் மாநில செயலர் தோழியர் மகாலட்சுமி இன்றைய அரசின் கொள்கைகளையும் , மகளிர் பிரச்சனைகளையும் விரிவாக பேசினார் .மதியம் 12 மணி அளவில் மாவட்ட பொது மேலாளர் திருமதி S .E .ராஜம் ,ITS அவர்கள் தனது உரையில் நமது மாவட்டத்தில் BROAD BAND இணைப்புகளை அதிகப்படுத்துவதற்கு ஒவ்வொரு ஊழியரும் ஒரு இணைப்பை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினார் .உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிரும் ஒன்று கூடிட மாவட்ட பொது மேலாளர் 8 கிலோ கொண்ட கேக்கை வெட்டி மகளிர் தின கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment