Saturday, March 21, 2015

சாத்தூர் கிளை மாநாடு

சாத்தூர் பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 11 வது கிளை மாநாடும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 6 வது கிளை மாநாடும் இன்று மாலை 5 மணி அளவில் சாத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது .கிளை தலைவர் தோழர் கனகாம்பரம் அவர்கள் தலைமையில் மாநாடு நடைபெற்றது .நமது சங்க கொடியை தோழர் கனகாம்பரம் ஏற்றிவைக்க ,தோழர் வெங்கடாசலபதி அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக கிளை மகாநாட்டை தொடக்கி வைத்தார் .அவர் தம் தொடக்க உரையில் நமது BSNL நிறுவனத்தில் எத்தனையோ சங்கங்கள் இருந்த போதும் நமது சங்கம் மட்டுமே முறையாக கிளை,மாவட்ட ,மாநில ,அனைத்திந்திய மகாநாடுகளை முறையான காலவரையில் நடத்துகின்றது .தற்போது ஆளும் மத்திய அரசு தொடர்ந்து பொது துறை நிறுவனங்களை சூறையாடுகிறது . நாம் எதை உண்ணுவது என்பதை கூட இந்த அரசாங்கம் முடிவு செய்கிறது .குறிப்பாக மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மகாராஷ்டிரா அரசின் செயலை சுட்டி காட்டினார் .தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாகளுக்கு ஆதரிப்பதையும் ,ஊடக உலகத்தை மொத்தமாக வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணங்களையும் அவர் தன பேச்சில் சுட்டி காட்டினார் .பெருந்துறையில் காவிரி நீரை கொளளையடிக்க கோகோ கோலா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ள மாநில அரசு ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு வருடத்திற்கு    வெறும் 7 ரூபாய்க்கு என்ற அடிப்படையில் 77 ஏக்கர் நிலம் கொடுத்த அவலத்தை சுட்டி காட்டினார் . நமது நிறுவனத்தை காக்க வர உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை 100% வெற்றி அடைய செய்ய வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார் .மகாநாட்டை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி , மாவட்ட தலைவர் சமுத்திரகனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ஆகியோர் பேசினர் .கிளையின் புதிய நிர்வாகிகளாக தோழர்கள் வெங்கடாசலபதி, காதர் மொய்தீன் ,கலையரசன் ஆகியோர் தலைவர் செயலர் மற்றும் பொருளாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர். தோழர் ஜெயச்சந்திரன் நன்றியுரை கூற மாநாடு  இனிதே நிறைவு பெற்றது . புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல வாழ்த்துக்கள் .










No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...