பி எஸ் என் எல் ஊழியர் சங்க அமைப்பு தினத்தை ஒட்டி இன்று விருதுநகர் மாவட்டத்தில் அணித்து கிளைகளிலும் நமது சங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது .விருதுநகரில் GM அலுவலக கிளையின் துணை தலைவர் தோழர் ராஜசேகரன் கொடியேற்றினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நமது சங்கம் நடந்து வந்த போராட்ட பாதையால் தான் நமது நிறுவனமும் ஊழியர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அதன் வெளிப்பாடு தான் தொடந்து 6 சரிபார்ப்பு தேர்தலில் 5 தேர்தலில் மகத்தான நமது வெற்றி என்பதை அவர் சுட்டி காட்டினார் .இன்று மாவீரன் பகத் சிங்கின் நினைவு நாளை ஒட்டி தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈத்த அவரின் தியாகம் நினைவு கூறப்பட்டது .தோழர் இளமாறன் எழுச்சி கோஷங்கள் எழுப்பிட தோழர் சிங்காரவேலு நன்றி கூறினார் .





No comments:
Post a Comment