20-12-2014 அன்று ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் தோழர் அனவரதம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ஆய்படு பொருளை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார் .கையெழுத்து இயக்கம் பற்றி மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் விளக்கினார் .வர உள்ள இயக்கங்களின் தொகுப்பையும் , அதில் ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டிய அவசியத்தையும் ,இன்றைய மத்திய அரசு பொது துறை நிறுவனங்களை சீரழிக்கும் கொள்கையை அமல்படுத்தி தனியார் நிறுவனங்களை கொழுக்க வைக்கும் போக்கையும் , மத வெறியை தூண்டி உழைக்கும் வர்க்க போராட்டத்தை திசை திருப்பும் அரசின் போக்கையும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனியும் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரனும் விளக்கமாக எடுத்துரைத்தனர் .மாவட்ட அமைப்பு செயலர்கள் தோழர்கள் சிவஞானம் மற்றும் இளைய தோழர் ராதாகிருஷ்ணன் அவர்களும் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில பொறுப்பாளர் தோழர் வேல்சாமி அவர்களும் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .











No comments:
Post a Comment