இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி ஆர் கிருஷ்ணய்யர் தனது 100 வது வயதில் காலமானார்.மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் இந்திய அரசியல் சாசனம் குறித்து இவர் வழங்கிய பல தீர்ப்புகள் இன்றைக்கும் இந்திய நீதிமன்றங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றன.கேரளாவில் ஈ எம் எஸ் நம்பூத்ரிபாட் தலைமையில், 1957 ஆம் ஆண்டு இந்தியாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம்பெற்றவர் திரு .கிருஷ்ணய்யர், இவரது பதவிக்காலம் நீதித்துறையின் பொற்காலமாக விளங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கோர்ட் கதவுகளை தட்டலாம் என்ற நம்பிக்கை விதை, மக்கள் மனதில் இவரின் தீர்ப்புகளால் விதைக்கப்பட்டது. பொதுநல வழக்காடுதலை இந்திய நீதித்துறையில் பரவலாக அறிய செய்தவர் கிருஷ்ணய்யர். விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் அவரது மறைவிற்கு தன் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .
Thursday, December 4, 2014
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment