Monday, April 7, 2014

விருதுநகர்: ஆயா கொடுத்த ஆயிரம்!

               
                   வேறு வண்ணப் பதாகைகள் எதுவும் இல்லை. செங்கொடிகளோடும் ஜிந்தாபாத் கோஷங்களோடும் விருதுநகர் தொகுதி முழுக்க வலம் வருகிறார்கள் காம்ரேடுகள்.“ரொம்ப நாளைக்கு பிறகு, நாம நமக்காக கொடி பிடிக்கிறோம், கோஷம் போடுகிறோம்!” சந்தோஷத்தை பரிமாறிக் கொள்கிறார்கள் தோழர்கள். விருதுநகர் தொகுதியில் சத்திரப்பட்டி கிராமத்திற்குள் ஓட்டுக் கேட்டு நுழைந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாமுவேல்ராஜை வழிமறித்த ஒரு மூதாட்டி, “மூணு நாலு மாசமா முதியோர் உதவித் தொகை வரலை. அதுக்கு முன்னாடி சிறுகச் சிறுக சேர்த்தது. செலவுக்கு ஆகும். வச்சுக்கங்க!” வேட்பாளரின் கையில் திணித்து விட்டுப் போனார். கண்கலங்கி விட்டார்கள் காம்ரேடுகள். அம்மையார்பட்டி, ஆலங்குளம், செவல்பட்டி கிராமங்களில் சாமுவேல்ராஜின் கழுத்தில் 10 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலைகள் விழுந்தன. “யாருகிட்ட வாங்கணும், யார்கிட்ட கொடுக்கணும்னு மக்களுக்கு நல்லாத் தெரியும்ல!” தோழர்கள் பொங்குகிறார்கள்.-
           < நன்றி: நக்கீரன் (2014, ஏப்.05-08)>

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...