"பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழிற்சாலைகளில் இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற தொழிற்சங்க உரிமை கூட மறுக்கப்படுகிறது. ஆளும் அரசுகள் உள்நாட்டு தொழிலாளர்களை விட பன்னாட்டு முதலாளிகளுக்கே ஆதரவாக உள்ளன. சட்ட, சமூக பாதுகாப்பு எதுவுமில்லாத முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூக அநீதிகளை சாய்த்து சமநீதியை உறுதிசெய்வோம். இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த மேதின நன்னாளில் சூளுரைப்போம்."
---------Com. G .R
No comments:
Post a Comment