அன்பார்ந்த தோழர்களே !
நாம் நடத்திய பல்வேறு செயற்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் மே மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் கேரள மாநிலத்துக்கு நமது BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக ஒரு குடும்ப சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கொச்சின் ,அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி ,குருவாயூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல தனி நபர் கட்டணமாக ரூபாய் 1000/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .தங்கும் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 50/- தனியாக கட்டவேண்டும் .குழந்தைகளுக்கு என்று அரை கட்டணம் கிடையாது .14-05-2014 அன்று இரவு ஒரு சிறப்பு பேச்சாளரின் உரை வீச்சு நடைபெறும் .மாவட்ட சங்கம் சார்பாக போட்டிகள் நடத்தி பரிசு வழங்கவும் ஏற்பாடு உண்டு .அனைத்து கிளை செயலர்களும் வரும் மே 1 தேதிக்குள் ஒவ்வொரு கிளையிலும் எத்துனை பேர் கலந்து கொள்கிறனர் என்ற விபரத்தை மாவட்ட சங்கத்திடம் கூறி விட வேண்டும் . வரும் நபர்களுக்கான தொகையை மே 5 தேதிக்குள் செலுத்திவிடவேண்டும் .
No comments:
Post a Comment