இன்று(10-04-2014) ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் மற்றும் தோழர் செல்வராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ,TTA அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பொதுக்குழுவை தொடக்கி வைத்து பேசும் போது நடந்து முடிந்த மாவட்ட மகாநாடு , தவறான மாற்றல் உத்தரவை இட்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மற்றும் சென்னை சொசைட்டி RGB தேர்தல் ஆகியவற்றின் வெற்றிக்கு நமது உருக்கு போன்ற ஒற்றுமை மட்டுமே காரணம் என்பதை விரிவாக கூறினார் .வர உள்ள மக்களவை தேர்தலில் ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவை அமல்படுத்தவேண்டிய கட்டாயத்தை விளக்கினார் .RGB தேர்தலில் திருமங்கலம் பார்முலா போல் NFTE சங்கத்தினர் வீடு வீடாக ரிஸ்ட் வாட்ச் கொடுத்த கேவலத்தையும் மீறி நாம் வெற்றி பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது என கூறி மாவட்ட செயலர் அனைவருக்கும் அதற்காக் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் .தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு செயற்குழுவில் சொல்லிய உடன் ரூபாய் 7500/- வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் பேசும் போது மாவட்டத்தில் வளர்ச்சி பணிக்கு மாவட்ட நிர்வாகம் எந்த விதத்திலும் உதவாத போக்கை கடைபிடிப்பதை உதாரணங்களுடன் எடுத்து உரைத்தார்.தோழர் செல்வராஜ்,TTA அவர்களின் பணி ஓய்வை பாராட்டி தோழர்கள் முத்துசாமி ,வெங்கடேஷ்,சிவஞா னம் ,வெள்ளை பிள்ளையார் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர் தோழர் வேல்சாமி ஆகியோர் பேசினர் .ஏற்புரையில் பேசிய தோழர் செல்வராஜ் சங்கத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டிய அவசியத்தை மிக அழகாக ஒரு குட்டி கதை கூறி விளக்கினார் .தோழர் செல்வராஜ் அவர்களுக்கு தோழர் ரவீந்திரன் மாவட்ட சங்கம் சார்பாக பொன்னாடை போர்த்தி கவ்ரவித்தார் .நினைவு பரிசை மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் வழங்கினார் .ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி தோழர் செல்வராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவ்ரவித்து மக்களவை தேர்தல் பணி குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்தார் .கிளை பொருளாளர் தோழர் I .முருகன் நன்றி கூற பொது குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment