‘புத்தகத்தை வாசித்ததால் நான் கெட்டுப்போனேன்’ என்று சொல்பவர்களை நாம் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. ‘அன்றே ஒழுங்காக வாசித்திருந்தால் இன்று நன்றாக இருந்திருப்பேன்’ ‘புத்தகம் படித்துக் கற்றுக் கொண்டேன்’ என்பவை நாம் அடிக்கடி கேட்கும் வாக்கியங்கள். இன்றைய மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது புத்தகங்கள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. நம் தோழர்களில் எத்தனை பேர் வாசிப்பை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்? ‘நேரமே கிடைக்கவில்லை தோழர்’ என்ற நொண்டிச்சாக்கை கூடைநிறைய நிரப்பித் தலையில் சுமந்து கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு ‘வாசிப்பதில்லையா?’ என்று கேட்பவர்கள் மேல் எறிந்து கொண்டிருக்கப் போகிறோம்.
இந்த ஆண்டு உலக புத்தக தினத்தில் ‘வாசிப்பை வாழ்க்கையின் நெறிகளில் ஒன்றாக்குவோம்’ என உறுதியேற்போம்.
‘கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்
கற்றதைப் பயன்படுத்தின் கொண்டே மேலும் கற்க வேண்டும்’
- தோழர் சப்தர் ஹாஷ்மி
No comments:
Post a Comment