நமது நிறுவனத்தில் உள்ள டவர்களை நிர்வகிக்க ஒரு துணை நிறுவனம் உருவாக்குவது என்பதற்கான குறிப்பை நிர்வாகம் இன்று (21-04-14) சங்கங்களிடம் வழங்கியது.துணை நிறுவனம் உருவாக்குவதற்கான காரணத்தை நிர்வாகம் பின்வருமாறு கூறியுள்ளது.
(i)பிஎஸ்என்எல்நிறுவனத்தில் 60,000க்கும் மேற்பட்ட டவர்கள் உள்ளன. ஆனால் அந்த டவர்களில் இருந்து போதிய வருவாய் கிடைக்கவில்லை.
(ii) டவர்களில் இருந்து மேலும் வருவாய் ஈட்டுவதற்காக , துணை நிறுவனம் அமைக்கநிர்வாகம் முடிவு செய்துள்ளது.
(iii)துணை நிறுவனம் உருவாக்குவதற்கான நோக்கத்திற்காக ஆலோசக நிறுவனமாக KPMG என்ற அமைப்பு பிஎஸ்என்எல் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டு அது தன் அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.
(iv)பிஎஸ்என்எல் வாரியம் துணை நிறுவனம் அமைக்க ஏற்கனவே அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டது. தற்போது அது அமைச்சர்கள் குழு முன் உள்ளது.
( V ) துணை நிறுவனம் உருவாக்கபட்டபின் ஒரு மூலதன மற்றும் தொழில்நுட்ப பார்ட்டனராக ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ப்பது.
நிர்வாகத்தின் குறிப்பை படித்தபின் அனைத்து தொழிற் சங்கங்களும் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சை போக்கில் பிஎஸ்என்எல்வாரியம் துணை நிறுவனம் அமைக்க ஒப்புதல் கொடுத்ததை வன்மையாக ஆட்சேபனை செய்துள்ளன. மேலும் ஒரு மூலதன மற்றும் தொழில்நுட்ப பார்ட்டனராக ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ப்பது என்பது பின்னாளில் பங்குகளை விற்று தனியார் மயமாக்கும் முயற்சியே என்று கடுமையாக எதிர்த்து உள்ளன.
இன்றைய கூட்டத்தில் நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர் P அபிமன்யூ, GS, தோழர் V.A.N.நம்பூதிரி, தலைவர், தோழர் அனிமேஷ் மித்ரா, Dy.GS. மற்றும் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, ஏ.ஜி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மற்ற சங்கங்களின் மற்றும் அசோசியேசன்ஸ் தலைவர்களும் ஒரு நல்ல எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment