இந்தியாவின் மாபெரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நடைபெற்ற சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் (பிஎஸ் என்எல்இயு), 99 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பொதுத்துறை நிறுவனமாம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை படிப்படியாக முடமாக்கும் விதத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறு வனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது, ஒரு லட்சம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுப்பது, தனியார் தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு அளவில்லாத சலுகைகளை அளிப்பது போன்ற மத்திய அரசின் நாசகர நடவடிக்கைகளை எதிர்த்து ஊழியர்களைத் திரட்டி பிரம்மாண் டமான உறுதிமிக்க போராட்டங்களை பிஎஸ்என்எல்இயு தொடர்ந்து நடத்தி வருகிறது.இந்தப்பின்னணியில் இந்நிறுவனத் தில் நாடு தழுவிய முறையில் சங்க அங்கீ காரத் தேர்தல் செவ்வாயன்று நடைபெற்றது.இத்தேர்தலின் முடிவுகள் வியாழனன்று வெளியாகின. இத்தேர்தலில் பிஎஸ்என்எல் ஊழியர் கள், தங்களது நல்வாழ்வுக்கு மட்டுமின்றி, நிறுவனத்தைக் காத்திட அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்கி பாதுகாத்து வரும் பிஎஸ்என்எல்இயு சங்கத்திற்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர்.நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்த முள்ள 2லட்சத்து 4 ஆயிரத்து 735 வாக்குகளில், பிஎஸ் என்எல்இயு சங்கம் 99 ஆயிரத்து 380 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றது. 61 ஆயிரத்து 915 வாக்குகளைப் பெற்று என்எப்டிஇ சங்கம் இரண்டாம் இடம் பெற்றது. எப்என்டிஒ அமைப்பு வெறும் 11 ஆயிரத்து 920 வாக்குகளே பெற்றது.அசாம், குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கிழக்கு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட வட்டங்களில் பிஎஸ்என்எல் இயு மாபெரும் வெற்றி பெற்றது. நன்றி :- தீக்கதிர்
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment