Monday, April 1, 2013

கார்பரேஷன்களின் கதி

 கார்பரேஷன் ஆனால் ... 


          இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே பங்குகளின் சரிவு, லாபத்தில் தொய்வு, அதிகரித்து வரும் ஊழியர்கள் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தாமதமாக வழங்கப்படும் ஊதியத்தினாலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கமிஷன் ஊதிய உயர்வைக் குறைக்கலாம் என்ற ஐயப்பாடும், விமானிகளிடம் எழுந்ததை அடுத்து இன்று வர்த்தக விமானிகள் கூட்டமைப்பு ஒன்றுகூடி இதுகுறித்து விவாதிக்க உள்ளது.

          சென்ற மாதம் அடிப்படை ஊதியமே வழங்கப்பட்டது என்றும், அதில் 80 சதவீத பயணச் சலுகைகள் தரப்படவில்லை என்றும் விமானிகள் தரப்பில் கூறப்படுகிறது.தாங்கள் இந்தத் தொடர் சம்பளப் பிரச்சினைகளால் மிகவும் வெறுப்படைந்து இருப்பதாக சங்க உறுப்பினர் ஒருவர் கூறினார். ஏற்கனவே குறைவான சம்பளம் பெறும் தாங்கள், கமிஷன் பரிந்துரைக்கும் அதிகப்படியான பிடித்தங்களை ஏற்க இயலாது என்றும் விமானிகள் கூறுகின்றனர்.

          இந்தியாவில் இயங்கும் மற்ற வர்த்தக விமானங்கள் மற்றும் வளைகுடா விமான நிறுவனங்களின் ஊதிய விபரங்களை அவர்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். மாற்றங்களை கண்டுள்ள ஏர் இந்திய நிறுவனமும், அந்தப் பலன்களை அவர்களுடைய ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
                                                                                                                    நன்றி :- மாலைமலர்

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...