Tuesday, April 30, 2013

பணி ஓய்வு பாராட்டு

          30-04-2013 அன்று நமது மாவட்டத்தின் முன்னணி ஊழியரும்,ராஜபாளையம் கிளைத் தலைவருமான நமது மாவட்டத்தில் K.G. போஸ் அணியை கட்டிய மூத்த தோழருமான P.தர்மராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா ராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. நமது மாநில உதவிச் செயலர்கள் தோழர்கள் M.முருகையா, தோழர் C.பழனிசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்க மூத்த தோழர் M.பெருமாள்சாமி அவர்கள் மாவட்டச் சங்கம் சார்பாக அவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர்கள் M.கருப்பசாமி, A.சமுத்திரகனி, CITU தோழர் கணேசன், தோழர் M.அய்யாசாமி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தோழர் P.தர்மராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.













10 வது மாவட்ட செயற்குழு

          நமது BSNLEU சங்கத்தின் 10ஆவது மாவட்டச் செயற்குழு 30-04-2013 அன்று ராஜபாளையம் நகரில் மாவட்டத் தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

          லோக்கல் கவுன்சில் உறுப்பினர்களாக கீழ்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
          1.தோழர் S.ரவீந்திரன்,
          2.தோழர் A.சமுத்திரகனி,
          3.தோழர் A.ஜெயபாண்டி,
          4.தோழர் T.முத்துராமலிங்கம்,
          5.தோழர் R.ஜெயக்குமார்,
          6.தோழர் A.கண்ணன்,
          7. தோழர் A.H.காதர் மொய்தீன்,
          8. M.S.இளமாறன்,
          9. L .தங்கதுரை.

          கீழ் கண்ட தோழர்கள் வொர்க் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
          1. தோழர் C.வெங்கடேஷ்,
          2.தோழர்M முத்துசாமி,
          3. தோழர் .C .சந்திரசேகரன்


          கீழ் கண்ட தோழர்கள் சேம நல நிதி  கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
          1. தோழர் G.ராஜு,
          2. தோழர் G.வெங்கடசாமி.

          சேவா BSNL மற்றும் TEPU சங்கத்திற்கு  LCM உறுப்பினர் பதவி கொடுப்பது பற்றி நமது செயற்குழுவின் முடிவு நமது மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு  செல்லப்படும்.Long standing மாறுதல்கள் பற்றிய நமது கருத்து மாவட்ட நிர்வாகத்திடம் 01-05-2013 அன்று சமர்பிக்கபடும்.
          



இன்று நடைபெற்ற செயற்குழுவில் மாநில உதவி செயலர்கள் தோழர் C.பழனிசாமி மற்றும் தோழர் M.முருகையா கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.

Saturday, April 27, 2013

மே 5 கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்

கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் 

                   

'மனித குலத்தின் நன்மைக்காக
நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய
வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால்
அதன் எந்த சுமையும் நம்மை அழுத்த முடியாது,
ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்’...


-- தோழர் கார்ல் மார்க்ஸ்

மே தின வாழ்த்துக்கள்

உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் அறை கூவல் 
21 ஆம் நூற்றாண்டின் அடிமைகள் நாம் அல்லர்  
அனைவர்க்கும் BSNLEU மாவட்ட சங்கத்தின் புரட்சிகர மே தின நல் வாழ்த்துக்கள் 
WFTUவின் அறை கூவலின் தமிழாக்கம் படிக்க CLICK HERE

Friday, April 26, 2013

அங்கீகார உத்தரவு

புதிய அங்கீகார விதிகளின் படி நடைபெற்ற 6 வது சரிபார்ப்பு தேர்தலில் வெற்றி பெற்ற நமது BSNLEU சங்கத்திற்கு முதன்மை அங்கீகார சங்கமாகவும் ,2 ஆம் இடம் பெற்ற NFTE சங்கத்திற்கு 2வது அங்கீகார சங்கமாகவும் அங்கீகரித்து BSNL நிர்வாகம் உத்தரவு வெளியிட்டு விட்டது .அங்கீகார காலம் 25-04-2013 முதல் 24-04-2016 வரை இருக்கும் . FNTO சங்கத்திற்கு JCM பிரதிநிதித்துவம் கிடையாது 
உத்தரவுக்கு :CLICK HERE வசதிகளுக்கு :CLICK HERE

Tuesday, April 23, 2013

மாவட்ட செயற்குழு

          வருகின்ற 30-04-2013 செவ்வாய் அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் ராஜபாளையம் நகரில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.மாநில துணைச்செயலர் தோழர் C.பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

 ஆய்படு பொருள்:-

1.JCM /வொர்க் கமிட்டி/சேம நல நிதி  உறுப்பினர் தேர்வு/நியமனம்.
2.JCM /வொர்க் கமிட்டி items 
3.வெற்றி விழா .
4. LONG standing மாறுதல் 
5. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற .

Monday, April 22, 2013

BSNL மற்றும் MTNL மறுசீரமைப்பு

மாண்புமிகு பாரத பிரதமர் திரு. மன்மோகன்சிங் அவர்கள் BSNL மற்றும் MTNL நிறுவனங்களை மறுசீரமைப்பு   செய்வதற்கு மாண்புமிகு நிதி அமைச்சர் திரு .ப .சிதம்பரம் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தி உள்ளார் .இந்த குழு 3 மாத அவகாசத்தில் அதன் கருத்துகளை பிரதமரிடம் சமர்பிக்க உள்ளது .
கூடுதல் தகவலுக்கு :Click Here

Sunday, April 21, 2013

ஏப்ரல் 23:- உலக புத்தக தினம்

புத்தகம் அறிவூட்டுகிறது .அன்பு புகட்டுகிறது .ஆவேசம் கொள்ள வைக்கிறது .சோகத்தை தணிக்கிறது.தனிமையை போக்குகிறது . நம்பிக்கை வழங்குகிறது .உயிர்ப்போடு இருக்க வைக்கிறது .புத்தகம் கால யந்திரம் போல. அது தான்  பேசுகிற காலத்திற்குள், அந்த குறிப்பிட்ட நிகழ்வுக்குள் வாசகரை கொண்டு இறக்குகிறது .ஒரே ஒரு துளி மை ஒரு மில்லியன் பேரை சிந்திக்க வைக்கிறது  என்றார் அறிஞர் .லார்ட் பைரன் .அடுத்த தலைமுறைகாண பரிசை கொடுக்க விரும்பினால் புத்தகங்களை கொடு என்கிறது சீன பழமொழி . யுனஸ்கோ விடுத்த அறைகூவலின்  படி ஏப்ரல் 23 நாளை உலக புத்தக தினமாக கொண்டாடுகிறோம் .வாசிப்போர்க்கு அந்த ஒரு தினம் மட்டுமா அல்ல வாசிக்கும்  ஒவ்வொரு நாளுமே இன்ப வாழ்கை  வாழும் தினம் தான் .

Saturday, April 20, 2013

வெனிசுலா அதிபராக பதவியேற்றார் நிகோலஸ் மதுரோ..

ஏகாதிபத்திய தடைகளை தாண்டி வெற்றி பெற்ற மதுரோவை வாழ்த்துவோம் 

நேரடி TTA தேர்வுக்கான அறிவிப்பு

தமிழகத்தில் நேரடி TTA தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .
அறிவிப்புக்கு :-Click Here

Friday, April 19, 2013

உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!

      சுதந்திரம்   அடைந்து 66 ஆண்டுகள் ஆகியும்  இந்திய நாட்டை ஆளும் வர்க்கத்தால் நாட்டின் வறுமையை போக்க முடியாத சூழ்நிலையை பாரீர் :-
          உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.உலக நாடுகளில் உள்ள ஏழைகளைப் பற்றிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தம் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இந்தியாவில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம், உலகில் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.இந்தியா, ஆசிய கண்டம் மற்றும் பசுபிக் பெருங்கடலை சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.    நன்றி :- வெப்துனியா 

அதிகார பூர்வ தேர்தல் முடிவு

 அதிகார பூர்வ தேர்தல் முடிவுக்கு  :-Click Here

சங்க அங்கீகாரத் தேர்தல் : பிஎஸ்என்எல்இயு மகத்தான வெற்றி


          இந்தியாவின் மாபெரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நடைபெற்ற சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் (பிஎஸ் என்எல்இயு), 99 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பொதுத்துறை நிறுவனமாம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை படிப்படியாக முடமாக்கும் விதத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறு வனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது, ஒரு லட்சம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுப்பது, தனியார் தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு அளவில்லாத சலுகைகளை அளிப்பது போன்ற மத்திய அரசின் நாசகர நடவடிக்கைகளை எதிர்த்து ஊழியர்களைத் திரட்டி பிரம்மாண் டமான உறுதிமிக்க போராட்டங்களை பிஎஸ்என்எல்இயு தொடர்ந்து நடத்தி வருகிறது.இந்தப்பின்னணியில் இந்நிறுவனத் தில் நாடு தழுவிய முறையில் சங்க அங்கீ காரத் தேர்தல் செவ்வாயன்று நடைபெற்றது.இத்தேர்தலின் முடிவுகள் வியாழனன்று வெளியாகின. இத்தேர்தலில் பிஎஸ்என்எல் ஊழியர் கள், தங்களது நல்வாழ்வுக்கு மட்டுமின்றி, நிறுவனத்தைக் காத்திட அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்கி பாதுகாத்து வரும் பிஎஸ்என்எல்இயு சங்கத்திற்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர்.நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்த முள்ள 2லட்சத்து 4 ஆயிரத்து 735 வாக்குகளில், பிஎஸ் என்எல்இயு சங்கம் 99 ஆயிரத்து 380 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றது. 61 ஆயிரத்து 915 வாக்குகளைப் பெற்று என்எப்டிஇ சங்கம் இரண்டாம் இடம் பெற்றது. எப்என்டிஒ அமைப்பு வெறும் 11 ஆயிரத்து 920 வாக்குகளே பெற்றது.அசாம், குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கிழக்கு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட வட்டங்களில் பிஎஸ்என்எல் இயு மாபெரும் வெற்றி பெற்றது. நன்றி :- தீக்கதிர் 


Thursday, April 18, 2013

தேர்தல் இறுதி முடிவு

6வது சரிபார்ப்பு தேர்தல் இறுதி முடிவு 
           BSNLEU     =   99,380 (48.60%).
            NFTE         =   61,915 (30.28%).
            FNTO         =  14,088 (6.89%).
           37,465  வாக்குகள் வித்தியாசத்தில்  நமது BSNLEU  சங்கம் NFTE சங்கத்தை  தோற்கடித்துள்ளது . 

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

BSNL, TAMILNADU  CIRCLE - 





2013-ELECTION RESULT


SSA
TOTAL VOTES
POLLED VOTES
INVALID VOTES
BSNLEU
NFTE
FNTO
OTHERS
1
COIMBATORE
1839
1782

1022
586
69

2
CUDDALORE
935
924

283
528
55

3
DHARMAPURI
411
410

309
70
20
11
4
ERODE
1037
1014

521
392
26

5
KARAIKUDI
492
485

77
274
123

6
KUMBAKONAM
564
553

96
378
64

7
MADURAI
1830
1774

797
585
199

8
NAGERCOIL
496
475

280
116
32
44
9
NILGIRIS
235
227

176
47
5
3
10
PUDUCHERRY
361
359

164
154
28

11
SALEM
1430
1414

584
696
67

12
THANJAVUR
803
780

116
572
25

13
TIRUNELVELI
799
778

315
369
38

14
TRICHY
1570
1559

454
741
249

15
TUTICORIN
482
476

224
183
45

16
VELLORE
1197
1186

310
772
62

17
VIRUDHUNAGAR
529
523

256
234
15

18
CGM OFFICE
595
555

194
225
96


TOTAL
15605
15274










6178
6922
1094



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...