விருதுநகர் GM அலுவலகம் மற்றும் SDOP /விருதுநகர் கிளைகளின் கூட்டு கிளை மாநாடு மற்றும் BSNL புத்தாக்க கருத்தரங்கம் மற்றும் தோழர் நாராயணன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 2015 ஜனவரி 24 அன்று மாலை 4 மணி அளவில் அதிர்வேட்டு பின்னணியில் இளமாறனின் எழுச்சி மிகு கோஷங்களுடன் ஆரம்பமானது. BSNLEU சங்க கொடியை மூத்ததோழர் நாராயணன் ஏற்றி வைக்க, TNTCWU சங்க கொடியை மாநில செயலர் தோழர் வினோத்குமார் ஏற்றிவைக்க கோலாகலமாய் துவங்கியது. தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க ஒரு நிமிட நேரம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தோழர்கள் ராஜசேகரன் மற்றும் லக்ஷ்மணன் ஆகியோரின் கூட்டு தலைமையில் மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக கிளை மாநாட்டை தொடக்கி வைத்தார். மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சிமிகு சிறப்புரை நிகழ்த்தினார். புத்தாக்க கருத்தரங்கதிற்க்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் C.வினோத்குமார் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரையாக தோழர்கள் K R கிருஷ்ணகுமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி, SNEA மாவட்ட செயலர் தோழர் G.செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
தோழர் நாராயணன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் அவரை வாழ்த்தி தோழர்கள் ரவீந்திரன், வெங்கடப்பன், KRK, ராஜசேகர், இளமாறன் ஆகியோர் பேசினர். தோழர் நாராயணன் அவர்களுக்கு மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சந்தன மாலையை தோழர் ரவீந்திரன் சூட்டிட நினைவு பரிசினை தோழியர் தனலட்சுமி அவர்கள் வழங்கினார்கள். 2 மாநில செயலருக்கும் மாவட்ட சங்கம் சார்பாக நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. GM அலுவலக கிளைக்கு தோழர்கள் முருகேசன், இளமாறன், மாரியப்பா ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். SDOP விருதுநகர் கிளைக்கு தோழர்கள் லக்ஷ்மணன், சிங்காரவேலு, சௌந்தரராஜன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள். பெரும் திரளாக பங்கேற்ற அனைவர்க்கும் மாவட்ட சங்கம் தன் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

No comments:
Post a Comment