BSNL ஐ பாதுகாக்க அகில இந்திய அளவில் நடைபெறும் 3 நாட்கள் தர்ணா போராட்டத்தின் முதல் நாளான இன்று FORUM சார்பாக விருதுநகர் பொது மேலாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் SNEA சங்க மாவட்ட தலைவர் திரு .கோவிந்தராஜன் , SDOT ,ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமையில் AIBSNLEA மாவட்ட செயலர் திரு தி .ராதாகிருஷ்ணன் ,மூத்த கணக்கு அதிகாரி அவர்களால் தொடக்கி வைக்கபட்டது BSNL ஐ பாதுகாக்க .ஒரு கோடி கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை CITU தலைவர் தோழர் தேனிவசந்தன் தொடக்கிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்,SNEA மாவட்ட செயலர் திரு .G செல்வராஜ்,SDE ஆகியோர் பேசினர் .போராட்டத்தை வாழ்த்தி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் .அய்யாசாமி,ஓய்வூதியர் சங்க மாநில உதவி செயலர் தோழர் பெருமாள்சாமி ,தோழர்கள் இளமாறன் , ஜெயபாண்டியன் ,கருப்பசாமி ,கிருஷ்ணகுமார் ,தர்மராஜ் ஆகியோர் பேசினர் .மாவட்ட பொருளாளர் தோழர் வெங்கடப்பன் நன்றியுரை கூற முதல் நாள் தர்ணா போராட்டம் முடிவுற்றது .















No comments:
Post a Comment