GPF மற்றும் விழா கால முன்பணம் வழங்குவதில் கடும் காலதாமதம் ஏற்பட்டுள்ள விசயமாக இன்று நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் திரு ராஜீவ் சிங் ,பொது மேலாளர் (CA) அவர்களிடம் பேசி உடனடியாக நிதி ஒதுக்கீட்டை செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார் .வழக்கம் போல் கார்போரேட் அலுவலகத்தில் நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறிய GM (C A ) அவர்கள் இது விசயமாக தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்வதாக கூறியுள்ளார் .
பல்வேறு மாநிலங்களில் போதுமான சிம் கார்டு இல்லாததை சுட்டி காட்டி நிர்வாகம் தேவையான உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது .தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் தமிழகத்தில் தேவையான சிம்கார்டுகள் இல்லாததை பல முறை சுட்டிக்காட்டியும், இன்று வரை சிம்கார்ட்கள் வழங்காத நிர்வாகத்தின் அலட்சிய போக்கினை கண்டித்து 13.01.2015 அனைத்து கிளை களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் அறை கூவல் விடுக்கின்றது. வெற்றிகரமாக்குவோம். BSNLஐ பாதுகாப்போம்.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
No comments:
Post a Comment