Tuesday, January 6, 2015

நிலக்கரி சுரங்க தொழிலாளர் ஸ்டிரைக்

        நாடு தழுவிய அளவில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஐந்து நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது.சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டு அனல் மின் நிலையங்களுக்கு சப்ளை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.கோல் இந்தியா நிலக்கரி நிறுவன ஊழியர்கள் உள்பட பிற நிலக்கரி தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், நிலக்கரித்துறை சீரமைப்பு, பங்குகள் விற்பனையை கைவிடுதல் மற்றும் தேசியமயமாக்குவதை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்து இருந்தனர்.இந்த போராட்டம் இன்று காலை முதல் தொடங்கியது. கோல் இந்தியா தொழிலாளர்கள் 100 % பேர் இதில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக சுரங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படும். இந்த நிலை நீடித்தால் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டு மின் விநியோகத்திலும் தடை ஏற்படும் என்று கூறப்படுகிறது.இது குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜிபான் ராய் கூறுகையில்,1977க்குப் பிறகு நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் இது தான் என்றார்.இதனிடையே ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், பிஎம்சி உள்ளிட்ட தொழிற்சங்கங்ளை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அழைத்து உள்ளது. இதற்கு முன் பேச்சு நடத்த வருமாறு அரசு தரப்பில் இருமுறை விடுக்கப்பட்ட அழைப்பை தொழிற்சங்கங்கள் புறக்கணித்து விட்டன. வாழ்த்துவோம் ! வீரம்செறிந்த நிலக்கரி சுரங்க தொழிலாளர் போராட்டத்தை ! 



No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...