அருப்புகோட்டை சுழல் மாற்றல் விசயமாக கடந்த 15 நாட்களாக நீடித்து வந்த கருத்து வேறுபாடு நமது BSNLEU சங்கமும், NFTE சங்கமும் இணைந்து இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் களையப்பட்டு ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அந்த அடிப்படையில் tenure முடித்த 8 தோழர்களுக்கு சுழல் மாற்றல் போடுவது என்று எழுத்துப்பூர்வமாக உடன்பாட்டில் இரண்டு மாவட்ட செயலர்களும் கையெழுத்திட்டு அருப்புகோட்டை கோட்ட பொறியாளரிடம் சமர்பிக்கப்பட்டது ஒற்றுமைக்கும், நமது போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். இரு சங்கங்களுக்கும் கருத்து வேறுபாட்டை களைவதில் உரிய வழிகாட்டிய நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன், நமது அனைத்திந்திய உதவி பொது செயலர் தோழர் செல்லப்பா, NFTE சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபி ஆகியோருக்கும், பேச்சுவார்த்தையில் உடன் இருந்து வழிகாட்டிய NFTE சங்கத்தின் காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் மாரி அவர்களுக்கும், உடன் இருந்து ஒற்றுமைக்கு துணை புரிந்த NFTE மாவட்ட செயலர் தோழர் சக்கணன் மற்றும் அனைத்து தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் .
சமுத்திரகனி ரவீந்திரன் அஷ்ரப் தீன் சோலை
தலைவர் செயலர் துணை செயலர் கிளை செயலர்
No comments:
Post a Comment