Friday, January 2, 2015

நியாயத்திற்கு கிடைத்த வெற்றி !..

பெருந்திரள் முறையீடு காட்சிகள்


4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவேண்டிய எழுத்தர் கேடர் மாறுதல் உத்தரவை திட்டமிட்டு நடைபெறாமல் இருப்பதற்கு எவ்வளவு செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்யும் அருப்புகோட்டை கோட்ட அதிகாரியின் ஆணவபோக்கை தட்டிகேட்க மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் போக்கை எதிர்த்தும், கேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் அமலாக்க அதிகாரி உத்தரவின்படி BSNL நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும் இன்று எழுச்சிமிகு போராட்டம் மாவட்ட சங்கம் சார்பாக நடைபெற்றது .போராட்டத்தின் முடிவில் அருப்புகோட்டை கோட்ட அதிகாரி மாவட்ட நிர்வாகம் வழிகாட்டியதின் பேரில் மாறுதல் உத்தரவை வெளியிட்டது    நாம் நடத்திய போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றிமட்டும் அல்ல , நியாயத்திற்கு கிடைத்த வெற்றி !.. அதே போல் கேபிள் பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு எதிரான "INNOVATIVE " நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்யும் வரை அவர்கள் ஊதியத்தை நிர்வாகமே வழங்க ஒரு வரைவு திட்டத்தை பொது மேலாளர் ஒப்புதலுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் ஒத்து கொண்டது .

1 comment:

  1. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...