விருதுநகர் GM அலுவலகத்தில் பணி புரிந்த தோழர் S நாராயணன் , SSS அவர்கள் இன்று பணி ஓய்வு பெற்றார் .அந்தமான் தீவுகளில் தன் பணியை துவக்கிய தோழர் நாராயணன் ,காரைக்குடியில் பணியை தொடர்ந்து விருதுநகரில் பணி நிறைவு செய்தார் .ஜனவரி மாதம் பணி நிறைவு உள்ள சூழலில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் நாராயணன் நமது அனைத்து இயக்கங்களிலும் கலந்து கொண்டவர் . பணி நிறைவை ஒட்டி அவர் மாநில சங்கத்திற்கு ரூபாய் 1000/ மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 2000/-மற்றும் கிளை சங்கத்திற்கு ரூபாய் 2000 என ஆக மொத்தம் ரூபாய் 5000/- நன்கொடையாக வழங்கியுள்ளார் .அவரது பணி ஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .
Saturday, January 31, 2015
BSNL ஐ பாதுகாக்க திரண்டு எழுந்த தமிழகம்
BSNL நிறுவன புத்தாக்கதிற்காக மத்திய அரசின் கவனத்தை
ஈர்க்க தேசம் தழுவிய அளவில் மார்ச் 17 முதல் தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி 30-01-2015 அன்று கடலூரில் FORUM சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது .BSNL மற்றும் MTNL நிறுவன இணைப்பு நமது BSNL நிறுவனத்திற்கு எவ்விதத்திலும் பயன் தராது என்பது மட்டும் அன்றி நமது நிறுவனத்தை மேலும்
சீரழித்து விடும் என்றும் , 01-01-2017 முதல் அமலாகவேண்டிய ஊதிய மாற்றம் என்பது நலிவடைந்த நமது நிறுவனத்திற்கு மறுக்கப்படும் அபாயத்தையும் , இதனால் ஓய்வூதியம் பெறுவோரும் பாதிக்கப் படும் நிலை உள்ளதையும் நமது பொது செயலர் சுட்டி காட்டினார் .நிறுவனத்தை பாதுகாக்க அனைவரும் சங்க வேறுபாடு இன்றி ஒன்று திரண்டது வர உள்ள போராட்டத்தை 100% வெற்றிகரமாக்க கடலூர் கருத்தரங்கம் பறைசாற்றியது .நமது மாவட்டத்தில் இருந்து நமது BSNLEU சங்கம் சார்பாக 41 பேர் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் வேல்சாமி கலந்து கொண்டார் .
Thursday, January 29, 2015
A .கந்தசாமி ,STS பணி ஓய்வு பாராட்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர் A .கந்தசாமி ,STS வரும் 31-01-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சங்கம் சார்பாக சீரும் சிறப்புமாய் 29-01-2015 அன்று தோழர் தங்கதுரை தலைமையில் கிளை செயலர் தோழர் சமுத்திரத்தின் வாழ்த்துரையுடன் தொடங்கியது .கே ஜி போஸ் பாசறையாம் ஈரோடு மாவட்டத்தில் தன பணியை தொடங்கிய தோழர் கந்தசாமி விருதுநகர் மாவட்டத்தில் பணி ஓய்வு பெறுகிறார் .அன்னாரை பாராட்டி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,தோழர் புளுகாண்டி ,தோழர் பெருமாள்சாமி , தோழர் முனியாண்டி ,முது பெரும் தோழர்கள் முத்தையா, மாசானம் ஆகியோர் பேசினர் .மாவட்ட செயலர் வாழ்த்தும் போது BSNL நிறுவனம் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளையும் ,BSNL புத்தாக்கத்திற்கு வர உள்ள போராட்டத்தின் முக்கியத்தையும் ,அதை 100% வெற்றியாக்க வேண்டிய அவசியத்தையும் கூறி தோழர் கந்தசாமி அவர்களை பாராட்டி பேசினார் .தோழர் ரவிச்சந்திரன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்கள் நிறைவாக செய்தது பாராட்டுக்குறியது .
பணி ஓய்வு
சாத்தூரில் பணிபுரியும் மூத்த தோழர் A .ராஜேந்திரன் , SSS அவர்கள் வரும் 31-01-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு BSNLEU மாவட்டசங்கத்தால் 28-01-2015 அன்று சாத்தூரில் கௌரவிக்கப்பட்டார் .தோழர் ராஜேந்திரன் விருதுநகர் மாவட்டத்தில் கே ஜி போஸ் அணியை கட்டுவதில் ஒரு பெரிய பங்கு வகித்தவர் .மாவட்ட சங்க நிர்வாகியாக கிளை சங்க பொறுப்பாளராக பணி செய்த தோழர் ராஜேந்திரன் அவர்கள் பணி ஓய்வு காலம் சிறக்க BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .
Saturday, January 24, 2015
கூட்டு கிளை மாநாடு மற்றும் BSNL புத்தாக்க கருத்தரங்கம்
விருதுநகர் GM அலுவலகம் மற்றும் SDOP /விருதுநகர் கிளைகளின் கூட்டு கிளை மாநாடு மற்றும் BSNL புத்தாக்க கருத்தரங்கம் மற்றும் தோழர் நாராயணன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 2015 ஜனவரி 24 அன்று மாலை 4 மணி அளவில் அதிர்வேட்டு பின்னணியில் இளமாறனின் எழுச்சி மிகு கோஷங்களுடன் ஆரம்பமானது. BSNLEU சங்க கொடியை மூத்ததோழர் நாராயணன் ஏற்றி வைக்க, TNTCWU சங்க கொடியை மாநில செயலர் தோழர் வினோத்குமார் ஏற்றிவைக்க கோலாகலமாய் துவங்கியது. தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க ஒரு நிமிட நேரம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தோழர்கள் ராஜசேகரன் மற்றும் லக்ஷ்மணன் ஆகியோரின் கூட்டு தலைமையில் மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக கிளை மாநாட்டை தொடக்கி வைத்தார். மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சிமிகு சிறப்புரை நிகழ்த்தினார். புத்தாக்க கருத்தரங்கதிற்க்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் C.வினோத்குமார் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரையாக தோழர்கள் K R கிருஷ்ணகுமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி, SNEA மாவட்ட செயலர் தோழர் G.செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
தோழர் நாராயணன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் அவரை வாழ்த்தி தோழர்கள் ரவீந்திரன், வெங்கடப்பன், KRK, ராஜசேகர், இளமாறன் ஆகியோர் பேசினர். தோழர் நாராயணன் அவர்களுக்கு மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சந்தன மாலையை தோழர் ரவீந்திரன் சூட்டிட நினைவு பரிசினை தோழியர் தனலட்சுமி அவர்கள் வழங்கினார்கள். 2 மாநில செயலருக்கும் மாவட்ட சங்கம் சார்பாக நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. GM அலுவலக கிளைக்கு தோழர்கள் முருகேசன், இளமாறன், மாரியப்பா ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். SDOP விருதுநகர் கிளைக்கு தோழர்கள் லக்ஷ்மணன், சிங்காரவேலு, சௌந்தரராஜன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள். பெரும் திரளாக பங்கேற்ற அனைவர்க்கும் மாவட்ட சங்கம் தன் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...