TTA மற்றும் ஓட்டுனர் கேடரில் ஊதிய விகிதங்கள் மாற்றப்பட்டதை பதவி உயர்வாக கணக்கில் எடுப்பது சரியல்ல என்ற நமது கோரிக்கையை நிர்வாகம் ஏற்று கொண்டுள்ளது .அதே போல் LDC கேடரில் இருந்து TOA கேடருக்கு சென்றதை பதவி உயர்வாக கொள்வது சரியல்ல என்ற நமது கோரிக்கையும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது .
N E 1 முதல் N E 5 ஊதிய விகிதத்தில் பதவி உயர்வின் போது CR இல் 4 average என்ட்ரிக்கு பதிலாக 5 என்ட்ரி ஏற்று கொள்ளப்படும் .N E 5 முதல் N E 8 ஊதிய விகிதத்தில் பதவி உயர்வின் போது CR இல் 3 average என்ட்ரிக்கு பதிலாக 4 என்ட்ரி ஏற்று கொள்ளப்படும் N E 8 முதல் N E 10 ஊதிய விகிதத்தில் பதவி உயர்வின் போது CR இல் 2 average என்ட்ரிக்கு பதிலாக 3 என்ட்ரி ஏற்று கொள்ளப்படும் .
E 1 ஊதிய விகிததிற்கான பதவி உயர்வு அடுத்த வாரம் நடைபெற உள்ள நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும் .
01-10-2013 க்கு பிறகு பதவி அடிப்படையில் ஆன பதவி உயர்வுகளை கணக்கில் எடுக்க கூடாது என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ள படவில்லை.
கேடர் பெயர் மாற்றத்திற்கான பரிந்துரைகள் 30-10-2013 அன்று நடை பெற உள்ள நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு வைக்கப்படும் .
பல்வேறு கமிட்டிகளில் நமது BSNLEU சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் 9:5 என்ற விகிதத்தில் வழங்கப்படவேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ள பட்டது .
01-01-2007 க்கு பிறகு பணியில் சேர்த்த ஊழியர்களுக்கு சமபள குறைவு பிரச்சனையில் 3 பொது மேலாளர்கள் கொண்ட கமிட்டி விரைவில் நல்ல பரிந்துரையை அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
RM /G r "டி "ஊதிய தேக்க பிரச்சனையை தீர்க்க N E 2 முதல் N E 5 ஊதிய விகிதங்களை இணைத்தால் தீர்க்கலாம் என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ளப்படவில்லை .
முதலாவது ஊதிய மாற்றத்தில் ஏற்பட்ட அனாமலி பிரச்னையில் ,அதை அமல்படுத்துவதால் 90 கோடி செலவாகும் என்று நிர்வாகம் கூறியது .நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு DOT ஒப்புதலுடன் பணியில் உள்ள ஊழியர்களுக்கு அமல்படுத்துவது அதுவும் உத்தரவு அமலாகும் தேதியில் இருந்து மட்டுமே .
நிதி சார்ந்த மருத்துவபடி , LTC , அலவன்ஸ்களை உயர்த்துவது போன்றவற்றிலும் , 5 நாட்கள் வேலை அமல்படுத்துவதிலும் , புதிய பதவி உயர்வு கொள்கையில் SC /ST ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் ,MANAGEMENT TRAINEE க்கு NON EXECUTIVE ஊழியர்களை அனுமதிப்பதிலும் ,J A O தேர்வில் சலுகை அளிப்பதிலும் , ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்குவதற்கும் நிர்வாகம் உடன்பாட்டுக்கு வரவில்லை .
JTO OFFICIATING பண்ணும் ஊழியர்களை JTO ஆக நியமனம் செய்ய நிர்வாகம் ஒத்து கொண்டுள்ளது .
லாபத்தின் அடிப்படையில் போனஸ் என்பதை நாம் ஏற்று கொள்ள முடியாது . DPE வழிகாட்டலின் படி புதிய போனஸ் கொள்கை அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலிக்கும் என்று நிர்வாகம் கூறியுள்ளது . ஆனால் 1 மாத ஊதியத்தை இந்த ஆண்டு போனஸ் ஆக கொடுக்க வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ள படவில்லை . நேற்றைய பேச்சுவார்த்தையில் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு ,தோழர் நம்பூதிரி , தோழர் மூத்கில் , தோழர் சுரேஷ்குமார் ,BSNLMS ஆகியோர் கலந்து கொண்டனர் .நிர்வாக தரப்பில் திரு கோயல் ,GM (E s t t ), திரு ராய் ,Dir (HR ) திரு நீரஜ் வர்மா , GM (SR )திரு சதீஷ் வாதவா ,DGM (SR )ஆகியோர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment