ஒப்பந்த ஊழியர்களின் ராஜபாளையம் கிளை மாநாடு 20-102-2013 அன்று தோழர் அனவரதம் மற்றும் கணேசன் அவர்களின் கூட்டு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . தோழர் வேல்சாமி அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க , மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் கிளை மகாநாட்டை முறையாக தொடக்கி வைத்து உரை ஆற்றினார் .அமைப்பை பலப்படுத்துவது , சம்பள பிரச்னை , போனஸ் பிரச்னை , EPF/ESI பிரச்சனைகளை எதிர்கொள்வதை பற்றி விரிவாக பேசினார் . ராஜை BSNLEU கிளை செயலர் தோழர் த .முத்துராமலிங்கம் அவர்கள் ஸ்தல மட்டங்களில் நமது ஒத்துழைப்பை பற்றி பேசினார் .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேசும் போது ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு BSNLEU மாவட்ட சங்கம் தன முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும் , ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காத போது நிர்வாகமே சம்பளம் வழங்கிய நிகழ்வுக்கு மாநிலத்திலேயே நமது மாவட்ட சங்கத்திற்கு பெரும் பங்கு உண்டு என்பதை நினைவு கூர்ந்தார்.நாகர்கோயில் ஒப்பந்த ஊழியர் மாநில மகாநாட்டில் பெரும் திரளாய் கலந்து கொண்ட தோழர்களுக்கு பாராட்டை தெரிவித்தார் . இணைந்த கிளையாய் இருந்த ராஜபாளையம் கிளை , தனி தனி கிளைகளாய் பிரிக்கப்பட்டது .
ராஜபாளையம் கிளைக்கு தோழர்கள் அனவரதம் , அழகர்சாமி , கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு தோழர்கள் தங்கதுரை , பாண்டியன்,மாயாண்டி ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.புதிய செயலர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

No comments:
Post a Comment