ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான போனஸ் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக TNTCWU மற்றும் BSNLEU மாவட்டச் சங்கங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. பலமுறை பேசிய பின்னர் கேபிள் பகுதியில் பணிபுரியும் தோழர்களுக்கு அதிக பட்சமாக 2000 என்ற அளவில் பணிநாள் விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. அது குறைவானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். மற்ற இரண்டு பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் போனஸ் தர மறுத்துள்ளார்கள்.
விஷயத்தைச் சுட்டிக்காட்டி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் முனியசாமி, BSNLEU மாவட்டச் சங்கம் மற்றும் TNTCWU மாநிலச் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி Labour Enforcement Officer (Central) அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போனஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் தோழர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment