Thursday, October 31, 2013
ஒப்பந்தத் தொழிலாளர்கள் போனஸ் தொடர்பாக...
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான போனஸ் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக TNTCWU மற்றும் BSNLEU மாவட்டச் சங்கங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. பலமுறை பேசிய பின்னர் கேபிள் பகுதியில் பணிபுரியும் தோழர்களுக்கு அதிக பட்சமாக 2000 என்ற அளவில் பணிநாள் விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. அது குறைவானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். மற்ற இரண்டு பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் போனஸ் தர மறுத்துள்ளார்கள்.
விஷயத்தைச் சுட்டிக்காட்டி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் முனியசாமி, BSNLEU மாவட்டச் சங்கம் மற்றும் TNTCWU மாநிலச் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி Labour Enforcement Officer (Central) அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போனஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் தோழர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.
Wednesday, October 30, 2013
ஒட்டு கேட்டு ஒட்டு கேட்டு அலுத்து போச்சாம்
டெலிபோன் பேச்சு ஒட்டுகேட்பு நிறுத்தி வைக்க ஒபாமா உத்தரவு- செய்தி படிக்க :-Click Here
Tuesday, October 29, 2013
மதுவும் மது சார்ந்த இடமும்!
'மதம் ஒரு அபின்' என்றார் மார்க்ஸ். 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார்.இறை எதிர்ப்பாளர்கள் இன்றும் என்றும் பயன்படுத்தக்கூடிய வாசகங்களாக மேற்கூறியவை அமைந்தன. அந்த சொற்றொடரை இன்றைய காலகட்டத்தில் புகுந்திருக்கும் புதிய நோயான மதுவை உள்ளடக்கி, மது ஒரு மனநோய், மதுவான பேய் பிடியாது இருக்க வேண்டும் என்று திருத்தி எழுத வேண்டியது அவசியமாகிறது.காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை, மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் என ஐந்திணைகளாக பண்டைத் தமிழர் வாழ்ந்த நிலங்கள் அவர்தம் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பகுக்கப்பட்டன. இன்றோ அவை ஐந்தையும் ஒன்றிணைத்து மதுவும் மதுசார்ந்த இடமும் தமிழகம் எனலாம்.கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில், ஏன் உலகளாவிய அளவில் மிக வேகமாக வளர்ந்த அரசுத்துறை நிறுவனம் எது என கேள்வி எழுமானால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் டாஸ்மாக் எனலாம். டாஸ்மாக் இணைய தளத்திற்கு (http://tasmac.tn.gov.in/) சென்று பார்த்தால் அரசு மது விற்பனையைக் கையில் எடுத்த பின்னர் டாஸ்மாக்கின் விற்பனைத்திறன் 53.85 சதம் வளர்ந்திருக்கிறது. மதுவின் மூலம் வரும் வருமானம் 115.23 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவ்விதமான அதீத வளர்ச்சியை அடைந்திருக்குமா என்ற கேள்விக்கு எவ்வித ஆதாரங்களும் நமக்கு காணக்கிடைப்பது அரிதினும் அரிது.பெரும்பாலான வெற்றிகரமான நிறுவனங்கள் 10 முதல் 20 சதவித வளர்ச்சியை எட்டவே ஏதேதோ செய்து திக்கு முக்காடுகின்றன. எவராலும் பெறமுடியாத வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என அரசு புளகாங்கிதம் அடைய முடியுமா என்றதொரு கேள்வி ஒருபுறம். ஏன் மது விற்பனையைக் குறைக்கக்கூடாது என்ற சமுக ஆர்வலர்களின் கேள்விக்கு “கள்ளச் சாராயம் பெருகிவிடும்” என்றவொரு பதில் மறுபுறம். விற்றவனோ மேனி நிமிர்ந்து வீறு நடை போட, குடித்தவனோ மேனி அழுகி தள்ளாடி சீரழிகிறான். மது எனும் மன நோய் குடிமக்களை கூண்டோடு அழிக்கிறது என உரக்கக் கூறும் நேரமிது. மனிதனைப் பிடித்துவிட்ட மதுவெனும் பேயை விரைந்து அடித்து விரட்ட வேண்டிய காலமிது. மது எனும் அரக்கனை உடனே சூரஹம்சாரம் பண்ண வேண்டிய வேளையிது. நாம் என்ன செய்யப்போகிறோம்?மதுவை மனிதன் குடிக்கிறானா, மனிதனை மது குடிக்கிறதா? இதை இன்னும் நாம் புரிந்து கொள்ள மறுத்தால், எதிர்காலம் புதிர்காலமாகும்... நிகழ்காலம் இருளாகிப் போகும்!. .விரிவாக படிக்க :-Click Here
நன்றி :- தி ஹிந்து
வார்த்தை தவறி விட்டாய் தோழா
என்னங்க அண்ணாச்சி
சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
வார்த்தை தவறி விட்டாய் தோழா
நெஞ்சு கொதிக்கிதப்பா !
பண்டிகை என்றாலும் சரிபார்ப்பு தேர்தல் என்றாலும் முதலில் ஞாபகம் வருவது "போனஸ்"
நமது சங்கத்தை" நையாண்டி " செய்வதற்கு அதிகம் பயன்படுத்திய வார்த்தை "போனஸ் "
அடைந்தால் " மகாதேவி "
இல்லையேல் "மரணதேவி "
என்ற பாணியில் நங்கள் வந்தால் "போனஸ்"
இல்லை என்றால் "நாசம் "
என்றவர்களுக்கு வீசுவதற்கு "அங்கீகார வாளை " கொடுத்துவிட்டோம் .
நாங்கள் வந்தால் " பாலைகள் சோலைகளாகும் "
"வறட்சி நீங்கி வளம் பெருகும் "
முதல் தேதியில் "முத்தாக GPF பணம் உன் கையில்
பாழாப்போன பாவிகள் "விட்டுகொடுத்த போனஸ் " வரும்
தீப திருநாளில் உன் திருகரங்களில் தவழும் .
அலவன்சுகளை அள்ளித்தர அஞ்சாமல் அலுக்காமல் போராடி
"கோணிப்பை "நிரம்பும்வரை விட மாட்டேன் .
"அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா " போல்
அன்று 5 பைசா வடை
10 பைசா டீ
விண் வெளியில் LTC (அதாங்க விமானத்தில் )
கனவானது போல் இன்று போனசையும் அவ் வரிசையில் சேர்த்து விடாதே
என் தோழா !
தேர்தலுக்காக நீங்கள் வீசிய "போனஸ் " "பூ மராங் ஆயுதம் " இன்று உங்களை தாக்க வருகிறது
காலம் நெருங்கி விட்டது
களம் உங்கள் முன்னே !
எதார்த்தம் புரிகிறது !
தடுமாற்றம் வருகிறது !
நோ ! நோ !
தயக்கத்தை தூக்கி எறி !
1 நாள் வேலை நிறுத்தம் என்ற வாளை தனியாக சுழற்று !
தெரியும் சேதி ! யார் உங்கள் பக்கம் என்று !
உங்கள் வாள் "புதிய வார்ப்புக்கலா "
துரு பிடித்து இத்து போன வாளா என்று !
எதுவும் கிடைத்தால் "நான் தான் என்று மார் தட்டுவது "
கிடைக்காவிட்டால் " ஒற்றுமை இல்லை என்று பீலா விடுவது "
எதுவும் கிடைத்தால் "நான் தான் என்று மார் தட்டுவது "
கிடைக்காவிட்டால் " ஒற்றுமை இல்லை என்று பீலா விடுவது "
கருத்து :- புறம் சொல்வது எளிது
Monday, October 28, 2013
ஒப்பந்த ஊழியர் போனஸ்
கேபிள் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூபாய் 2000/= போனஸ் வழங்க ஒப்பந்தக்காரர் ஒப்புக்கொண்டு இன்று பணம் பட்டுவாடா செய்துள்ளார். வேலை பார்த்த நாட்கள் அடிப்படையில் விகிதாசாரப்படி போனஸ் வழங்கியுள்ளதை மாநில சங்கத்திற்கு தெரியப்படுத்தி உள்ளோம். மாநில சங்க வழிகாட்டலின்படி மாவட்டச் சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்.
மகளிர் பயிலரங்கம்
நவம்பர் 17 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மகளிர் பயிலரங்கம் கோயம்புத்தூரில் பிரதான தொலைபேசி நிலையம் அருகே உள்ள தாமஸ் மன்றத்தில் நடைபெற உள்ளது.
வரவேற்புரை : தோழியர் K .பங்கஜவல்லி
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா
காலை அமர்வு
தலைமை : தோழியர் பிரேமா
ஆசிரியர் : தோழியர் கிரிஜா
பொருள் :சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள்
பிற்பகல் அமர்வு
தலைமை : தோழியர் ராஜலட்சுமி
ஆசிரியர் : தோழர் செல்லப்பா , மாநில செயலர்
புதிய பதவி உயர்வு
18-10-2013 அன்று நமது BSNLEU சங்க தலைமையிலான UNITED FOURMற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி CR இல் 'சராசரி' உள்ளீடுகளுக்காக (பதிவு) NEPP பதவி உயர்வுகள் மறுக்கபடுவதை தவிர்க்க நாம் கொடுத்த குறிப்புகள் நிர்வாக கமிட்டி கூட்டத்தில் இன்று (28-10-2013) ஏற்றுக் கொள்ளப்பட்டது. நமது போராட்ட அழைப்பிற்கு இது முதல் வெற்றி.
Sunday, October 27, 2013
Saturday, October 26, 2013
Friday, October 25, 2013
முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.
லண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ நாடார் 8.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா 8.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகரான ஷாருக்கான் 400 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் இப்பட்டியலில் 114 வது இடத்ததை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ நாடார் 8.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா 8.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகரான ஷாருக்கான் 400 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் இப்பட்டியலில் 114 வது இடத்ததை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யப்பா! இப்பயே கண்ணக் கட்டுதப்பா!
காற்றில் கலந்தார் மன்னா டே!
இந்திய திரையுலகில் பின்னணிப் பாடகராக கொடிகட்டிப் பறந்த மன்னா டே 1919-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பாரம்பரிய மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரபோத் சந்திரா டே.சிறு வயது முதலே இசை ஆர்வம் மிகுந்த இவர் தனது மாமாவும் பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளருமான கிருஷ்ண சந்திரா டே மூலமாக மும்பைக்கு அழைத்துவரப்பட்டார்.தனது வெண்கலக் குரல் மூலம் மக்களின் மனங்களை மயக்கும் வகையில் பாடல்கள் பாடியதால் 'மன்னா டே' என அழைக்கப்பட்டார். காதல் ததும்ப இவர் பாடிய இனிய கீதங்கள் என்றென்றும் காலத்தால் அழியாதவை. கடந்த ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து திரைத்துறையில் பாடி வந்த மன்னா டே தனது சுயசரிதத்தை 2005-ம் ஆண்டு "உயிருள்ள நினைவுகள்'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டார். மன்னா டே-வின் மரண செய்தி கேட்டு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது.
Thursday, October 24, 2013
மத்திய சங்க செய்திகள்
புயல் பாதித்த பகுதிகளில் நமது ஊழியர்களுக்கு வட்டியில்லாமல் 1 மாத PAY அட்வான்ஸ் வழங்க நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது
கவுன்சில்களில் கூடுதல் உறுப்பினர் நியமிப்பதில் கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் உத்தரவு வெளியிட நமது பொது செயலர் தோழர் அபிமன்யு, மற்றும் அனிமேஷ் மித்ரா அவர்கள் 23-10-2013 அன்று பொதுமேலாளர் ( SR ) திரு .நீரஜ் வர்மா அவர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர் . இன்னும் ஓரிரு நாட்களில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார் .
நிதி நிலையில் சரிந்த நமது நிறுவனத்தை நிலை நிறுத்துவதற்கு அனைத்து சங்கங்களின் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் அக் கூட்டம் நடத்தப் படும் என இயக்குனர் (மனித வளம் ) திரு A .N .ராய் அவர்கள் உறுதி அளித்துள்ளார்
நமது சங்கத்தின் அடுத்த மத்திய செயற்குழு பிப்ரவரி மாத மத்தியில் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் .
டிசம்பர் 12 ம் தேதி பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பிற்கான கோரிக்கைகளை மையபடுத்தி 18-11-2013 முதல் 23-11-2013 வரை கோரிக்கை வாரம் அனுஷ்டிக்க நமது சங்கம் அறை கூவல் விடுத்துள்ளது .கிளை மற்றும் மாவட்ட மையங்களில் திரளான கூட்டம் நடத்த வேண்டும் .
சென்னை சொசைட்டியில் விழாக் கால கடன் ரூ.10000/- நாளை 25.10.2013 முதல் பட்டுவாடா செய்யப்படும். சனிக்கிழமையும் பட்டுவாடா உண்டு.
Festival loan from Government Telecom Employees Cooperative Society (Chennai Society) will be disbursed on 25.10.2013 at all branches. Payment will be done on Saturday (26.10.2013) also.
பேட்டி
23-1-2013 அன்று மாவட்ட சங்கம் மாவட்ட பொது மேலாளரை பேட்டி கண்டது. கீழ் கண்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
1. சிவகாசி பகுதியில் மழையால் 300 க்கும் மேற்பட்ட WiMax இணைப்புகள் பழுதாகி உள்ளன என்பதையும், கடந்த 10 நாட்களாக பழுது சரியாகாமல் உள்ளதை சுட்டி காட்டி விரைவில் சரி செய்ய கோரியுள்ளோம்.
2.ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நல சட்டத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
3. நத்தம்பட்டி தொலைபேசி நிலையத்திற்கு ஒரு டெலிகாம் மெக்கானிக் உடனடியாக நியமிக்க வலியுறுத்தி உள்ளோம்.
4.கார்போரேட் அலுவலக உத்தரவுகளை அமல்படுத்துவதில் நமது மாவட்டத்தில் விதி மீறல்கள் இருப்பதை சுட்டி காட்டி O B C Union கூட்டம் நடத்த 05-09-2013 அன்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை நாம் மாவட்ட பொது மேலாளரிடம் சுட்டிக் காட்டிய போது, பொது மேலாளர் அவர்கள் எதிர காலத்தில் இது போன்ற அனுமதி வழங்க கூடாது என அதிகாரிகளுக்கு வழி காட்டியுள்ளார் .
அருப்புகோட்டை மாறுதல் விசயத்தில் மாறுதல் கொள்கைக்கு மாறுபட்ட எந்த முடிவையும் நமது சங்கம் ஏற்று கொள்ளாது எனத் தெளிவாக கூறிவிட்டோம்.
அருப்புகோட்டை மாறுதல் விசயத்தில் மாறுதல் கொள்கைக்கு மாறுபட்ட எந்த முடிவையும் நமது சங்கம் ஏற்று கொள்ளாது எனத் தெளிவாக கூறிவிட்டோம்.
"ஜாதிகள் இல்லையடி பாப்பா " ----மஹா கவி பாரதி
Wednesday, October 23, 2013
78.2 % IDA
நமது CMD அவர்கள் 78.2 % IDA இணைப்பால் 01-01-2007 முதல் 10-06-2013 வரையில் ஊழியர்களுக்கு வழங்கபடாத நிலுவைதொகையை நிறுவனம் நிதி நிலையில் முன்னேறியவுடன் கொடுக்க வேண்டும் எனவும், 01-01-2007 முதல் 10-06-2013 வரை பணி ஓய்வு பெற்ற பென்சன்தாரர்களுக்கு 78.2 % IDA இணைப்பின் படி பென்ஷன் உயர்த்தபடவேண்டும் எனவும் 21-10-2013 அன்று DOT செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
Tuesday, October 22, 2013
மூடர் கூடம்
மூடர் கூடம் -ஒரு சிறப்பு பார்வை
ஊழியர் :- அண்ணே ! எனக்கு அக்டோபர் மாதம் இன்கிரிமெண்ட் !
தலைவர் :- அதுக்கு என்ன !
ஊழியர் ::- தலைவா ! நான் இப்ப விருப்ப ஓய்வில் போகப்போறேன் !
தலைவர் :- எதுக்குப்பா !
ஊழியர் :- வயசான காலத்தில் எனக்கு டிரான்ஸ்பர் வாங்கி கொடுத்து விட்டிங்களே !
தலைவர் :- சரிப்பா அதெல்லாம் முடிஞ்சி போன விஷயம்!உனக்கு அக்டோபர் மாசம் இன்கிரிமெண்ட் என்றால் நீ செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுவது நல்லது .
ஊழியர் :- எதுக்கு அண்ணே ! இப்படி சொல்லுறிங்க !
தலைவர் :- போக போக தெரியும் பார் !
ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஒரு நாள்
ஊழியர் :- அண்ணே ! எல்லாம் போச்சு !
தலைவர் :- என்னப்பா சொல்ற ?
ஊழியர் :- அண்ணே ! நான் அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றால் கிரஜிவிட்டீ ரூபாய் 4,99,661 ம், லீவை காசாக்குவதில் ரூபாய் 3,63,390 ம் , கமுடேசன் ரூபாய் 7,42,383 ம் வருமாம் .
தலைவர் :- நீ செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றதால்
கிரஜிவிட்டீ ரூபாய் 4,67,871, ம், லீவை காசாக்குவதில் ரூபாய் 3,40,270 ம் கமுடேசன் ரூபாய் 6,95,192 ம் வரும்லப்பா! BSNLEU காரன் ஆயிரம் சொல்லுவான்.அதெல்லாம் நம்பாதே !
கிரஜிவிட்டீ ரூபாய் 4,67,871, ம், லீவை காசாக்குவதில் ரூபாய் 3,40,270 ம் கமுடேசன் ரூபாய் 6,95,192 ம் வரும்லப்பா! BSNLEU காரன் ஆயிரம் சொல்லுவான்.அதெல்லாம் நம்பாதே !
ஊழியர் :- புரியாம பேசாதிங்க !
தலைவர் :- யாரு புரியாம பேசுறது ! நஷ்டத்தில்
போற நம் கம்பெனிக்கு ரூபாய் 1,02,101/- வருமானம் வர வச்சிரிக்கேன் ! இத்தனை நாள் போனஸ் கிடைக்காததிற்கு நம்பூதிரி மேல் பழிய போட்டேன் இனி போனஸ் வேண்டும் என்றால் ஒன்னைய மாதிரி சிக்குனவனை எல்லாம் இப்படி தான் மாட்டி விட போறேன் . அப்ப தான் கம்பெனி லாபத்திற்கு வரும் .லாபம் வந்தா தான் போனஸ் வரும் . போனஸ் வந்தா தான் எங்களுக்கு ஓட்டு விழும் .
போற நம் கம்பெனிக்கு ரூபாய் 1,02,101/- வருமானம் வர வச்சிரிக்கேன் ! இத்தனை நாள் போனஸ் கிடைக்காததிற்கு நம்பூதிரி மேல் பழிய போட்டேன் இனி போனஸ் வேண்டும் என்றால் ஒன்னைய மாதிரி சிக்குனவனை எல்லாம் இப்படி தான் மாட்டி விட போறேன் . அப்ப தான் கம்பெனி லாபத்திற்கு வரும் .லாபம் வந்தா தான் போனஸ் வரும் . போனஸ் வந்தா தான் எங்களுக்கு ஓட்டு விழும் .
ஊழியர் :- பாஸ் ! என்ன பாஸ் ! இப்படி பேசுறிங்க ! உங்க சங்கத்தில் நான் எவ்வளவு விசுவாசமாய் இருந்தேன் ! எனக்கு ஒரு லட்சம் போச்சு ! பென்சனும் குறைந்து போச்சு !
தலைவர் :- நீ விருப்ப ஓய்வில் செல்ல போகிறேன் என்று சொன்ன உடன் எனக்கு உன்மேல் விருப்பம் போச்சு ! ஓட்டு இல்லாதவனை எனக்கு வைத்து என்ன புரோஜனம் !
ஊழியர் :-விதிக்கு புறம்பான அருப்புகோட்டை 1 வருட மாறுதலை அமல்படுத்த உண்ணாவிரதம் இருப்பிங்க !எனக்கு 1 லட்சம் போச்சு அதற்கு என்ன செய்ய போறீங்க !
தலைவர் :- நீ உன் வீட்டுல போய் உண்ணாவிரதம் இரு !
ஊழியர் :- உங்க கூட இருந்ததற்கு எனக்கு இன்னும் வேணும் !
தலைவர் :- டேய் ! இதுதாண்டா NFTE
படம் பார்த்தவர் கருத்து:தலைப்புக்கு பொருத்தமான பாத்திரங்கள்
Monday, October 21, 2013
ஆரம்பிச்டாங்கப்பா !ஆரம்பிச்டாங்கப்பா !
ஒரு பக்கம் விருப்ப ஓய்வை எதிர்ப்பது போல் நடிப்பது .மற்றொரு பக்கம் 10000 பெண் ஊழியர்கள் கோல் இந்தியா நிறுவனத்தில் விருப்ப ஓய்வில் செல்ல போறதாகவும் அதற்கு அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் ஆதரித்து உள்ளன என்ற தவறான செய்தியை பரப்புகிறது NFTE இணைய தளம் .CITU கூறியுள்ளதை பாருங்கள் ."Actually the CITU is the only union in Coal India Ltd. which has opposed this special VRS Scheme for women and the discrimination in not giving employment to female heirs" விரிவான செய்தி படிக்க :Click HERE
ஓசி போன்
மத்திய அரசாங்கம் 25 மில்லியன் கிராமப்புற வீடுகளுக்கு இலவச இணைய அலைபேசிகள் வழங்கப் போகிறதாம் .செய்தி படிக்க :- Click here
Sunday, October 20, 2013
ஒப்பந்த ஊழியர்களின் ராஜபாளையம் கிளை மாநாடு
ஒப்பந்த ஊழியர்களின் ராஜபாளையம் கிளை மாநாடு 20-102-2013 அன்று தோழர் அனவரதம் மற்றும் கணேசன் அவர்களின் கூட்டு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . தோழர் வேல்சாமி அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க , மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் கிளை மகாநாட்டை முறையாக தொடக்கி வைத்து உரை ஆற்றினார் .அமைப்பை பலப்படுத்துவது , சம்பள பிரச்னை , போனஸ் பிரச்னை , EPF/ESI பிரச்சனைகளை எதிர்கொள்வதை பற்றி விரிவாக பேசினார் . ராஜை BSNLEU கிளை செயலர் தோழர் த .முத்துராமலிங்கம் அவர்கள் ஸ்தல மட்டங்களில் நமது ஒத்துழைப்பை பற்றி பேசினார் .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேசும் போது ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு BSNLEU மாவட்ட சங்கம் தன முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும் , ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காத போது நிர்வாகமே சம்பளம் வழங்கிய நிகழ்வுக்கு மாநிலத்திலேயே நமது மாவட்ட சங்கத்திற்கு பெரும் பங்கு உண்டு என்பதை நினைவு கூர்ந்தார்.நாகர்கோயில் ஒப்பந்த ஊழியர் மாநில மகாநாட்டில் பெரும் திரளாய் கலந்து கொண்ட தோழர்களுக்கு பாராட்டை தெரிவித்தார் . இணைந்த கிளையாய் இருந்த ராஜபாளையம் கிளை , தனி தனி கிளைகளாய் பிரிக்கப்பட்டது .
ராஜபாளையம் கிளைக்கு தோழர்கள் அனவரதம் , அழகர்சாமி , கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு தோழர்கள் தங்கதுரை , பாண்டியன்,மாயாண்டி ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.புதிய செயலர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
ராஜபாளையம் கிளைக்கு தோழர்கள் அனவரதம் , அழகர்சாமி , கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு தோழர்கள் தங்கதுரை , பாண்டியன்,மாயாண்டி ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.புதிய செயலர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
Saturday, October 19, 2013
பேச்சுவார்த்தையின் சாராம்சம்
TTA மற்றும் ஓட்டுனர் கேடரில் ஊதிய விகிதங்கள் மாற்றப்பட்டதை பதவி உயர்வாக கணக்கில் எடுப்பது சரியல்ல என்ற நமது கோரிக்கையை நிர்வாகம் ஏற்று கொண்டுள்ளது .அதே போல் LDC கேடரில் இருந்து TOA கேடருக்கு சென்றதை பதவி உயர்வாக கொள்வது சரியல்ல என்ற நமது கோரிக்கையும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது .
N E 1 முதல் N E 5 ஊதிய விகிதத்தில் பதவி உயர்வின் போது CR இல் 4 average என்ட்ரிக்கு பதிலாக 5 என்ட்ரி ஏற்று கொள்ளப்படும் .N E 5 முதல் N E 8 ஊதிய விகிதத்தில் பதவி உயர்வின் போது CR இல் 3 average என்ட்ரிக்கு பதிலாக 4 என்ட்ரி ஏற்று கொள்ளப்படும் N E 8 முதல் N E 10 ஊதிய விகிதத்தில் பதவி உயர்வின் போது CR இல் 2 average என்ட்ரிக்கு பதிலாக 3 என்ட்ரி ஏற்று கொள்ளப்படும் .
E 1 ஊதிய விகிததிற்கான பதவி உயர்வு அடுத்த வாரம் நடைபெற உள்ள நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும் .
01-10-2013 க்கு பிறகு பதவி அடிப்படையில் ஆன பதவி உயர்வுகளை கணக்கில் எடுக்க கூடாது என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ள படவில்லை.
கேடர் பெயர் மாற்றத்திற்கான பரிந்துரைகள் 30-10-2013 அன்று நடை பெற உள்ள நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு வைக்கப்படும் .
பல்வேறு கமிட்டிகளில் நமது BSNLEU சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் 9:5 என்ற விகிதத்தில் வழங்கப்படவேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ள பட்டது .
01-01-2007 க்கு பிறகு பணியில் சேர்த்த ஊழியர்களுக்கு சமபள குறைவு பிரச்சனையில் 3 பொது மேலாளர்கள் கொண்ட கமிட்டி விரைவில் நல்ல பரிந்துரையை அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
RM /G r "டி "ஊதிய தேக்க பிரச்சனையை தீர்க்க N E 2 முதல் N E 5 ஊதிய விகிதங்களை இணைத்தால் தீர்க்கலாம் என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ளப்படவில்லை .
முதலாவது ஊதிய மாற்றத்தில் ஏற்பட்ட அனாமலி பிரச்னையில் ,அதை அமல்படுத்துவதால் 90 கோடி செலவாகும் என்று நிர்வாகம் கூறியது .நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு DOT ஒப்புதலுடன் பணியில் உள்ள ஊழியர்களுக்கு அமல்படுத்துவது அதுவும் உத்தரவு அமலாகும் தேதியில் இருந்து மட்டுமே .
நிதி சார்ந்த மருத்துவபடி , LTC , அலவன்ஸ்களை உயர்த்துவது போன்றவற்றிலும் , 5 நாட்கள் வேலை அமல்படுத்துவதிலும் , புதிய பதவி உயர்வு கொள்கையில் SC /ST ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் ,MANAGEMENT TRAINEE க்கு NON EXECUTIVE ஊழியர்களை அனுமதிப்பதிலும் ,J A O தேர்வில் சலுகை அளிப்பதிலும் , ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்குவதற்கும் நிர்வாகம் உடன்பாட்டுக்கு வரவில்லை .
JTO OFFICIATING பண்ணும் ஊழியர்களை JTO ஆக நியமனம் செய்ய நிர்வாகம் ஒத்து கொண்டுள்ளது .
லாபத்தின் அடிப்படையில் போனஸ் என்பதை நாம் ஏற்று கொள்ள முடியாது . DPE வழிகாட்டலின் படி புதிய போனஸ் கொள்கை அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலிக்கும் என்று நிர்வாகம் கூறியுள்ளது . ஆனால் 1 மாத ஊதியத்தை இந்த ஆண்டு போனஸ் ஆக கொடுக்க வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ள படவில்லை . நேற்றைய பேச்சுவார்த்தையில் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு ,தோழர் நம்பூதிரி , தோழர் மூத்கில் , தோழர் சுரேஷ்குமார் ,BSNLMS ஆகியோர் கலந்து கொண்டனர் .நிர்வாக தரப்பில் திரு கோயல் ,GM (E s t t ), திரு ராய் ,Dir (HR ) திரு நீரஜ் வர்மா , GM (SR )திரு சதீஷ் வாதவா ,DGM (SR )ஆகியோர் கலந்து கொண்டனர் .
வேலை நிறுத்தம் ஒத்தி வைப்பு
19-10-2013 அன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் 25-10-2013 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பது என்று முடிவு எடுக்கக் பட்டுள்ளது
Friday, October 18, 2013
Thursday, October 17, 2013
பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி:கூடுதல் மாணவர்களைச் சேர்க்க பிஎஸ்என்எல் முடிவு
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சியில் கூடுதல் மாணவர்களை சேர்க்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.அரசின் தொலைபேசி நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மதுரை வட்ட அலுவலகம், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்பிளாண்ட் எனப்படும் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் நெட்வொர்க் பேசிக், ஆரக்கிள் போன்ற கணினி தொடர்பான பாட வகுப்புகளை நடத்தி வருகிறது.இதில் புதிதாக இந்த ஆண்டு, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பிரத்யேகமாக சில்வர், கோல்டு, பிளாட்டினம் என 3 விதமான சான்றிதழ் பயிற்சிகளை தொடங்கியது.சுவிட்சிங், டிரான்ஸ்மிஷன், இன்பிராஸ்டிரக்சர் (கட்டமைப்பு) ஆகியவற்றில் பயிற்சி அளித்து சில்வர் சான்றும் பிராட்பேண்ட் மற்றும் ஆப்டிகல் பைபர் (செயற்கை இழை) தொடர்பான பயிற்சி அளித்து கோல்டு சான்றும், ஜிஎஸ்எம், மொபைல்டெக்னாலஜி ஆகியவை தொடர்பாக பயிற்சி அளித்து பிளாட்டினம் சான்றிதழையும் வழங்குகிறது.அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பிஎஸ்என்எல் முகாமுக்கு அனுப்பப்படுகின்றனர். மாணவர்களின் வசதிக்கேற்ப பயிற்சி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 8 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 295 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தல்லாகுளம் மற்றும் எல்லிஸ்நகரில் உள்ள மையங்களில் நேரடியாக தொழில்நுட்ப முறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இதில் கூடுதல் மாணவர்களை சேர்க்க பிஎஸ்என்எல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சில் பிஎஸ்என்எல்-க்கு வழங்குகிறது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயன்பெறுவதாக இருப்பதால் இதில் மேலும் கூடுதல் மாணவர்களைச் சேர்த்து பயிற்சி அளிக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், பயிற்சிக்கான கட்டணத்தை கல்லூரி மாணவர்களே செலுத்த வேண்டியிருக்கும். மேலும் அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சில் சான்றிதழ் வழங்குவதற்கு பதில் பிஎஸ்என்எல் சான்றிதழ்களை வழங்கும். வேலைவாய்ப்புக்கு இந்த சான்று உதவும் என்பதால் கூடுதல் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
நன்றி :-தினமணி
சமரசமற்ற போராட்டம் தொடரும்
மாறுதல் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தும் உரிமை மாவட்ட நிர்வாகத்திற்கு கிடையாது . தடம் மாறினால் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கொடுக்கும் முகமாய் திரண்டு வந்து உரிமை குரல் கொடுத்த தோழர்கள் தோழியர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .நமது குரலை மாநில நிர்வாகத்திடம் பேசிய மாநில செயலர் தோழர் S செல்லப்பா மற்றும் மாநில உதவி செயலர் தோழர் M முருகையா அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றியை உரிதாக்குகிறோம் .
தனியார் இணைய கட்டண உயர்வு
ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் 2G இணைய கட்டணத்தை 25% உயர்த்தி உள்ளன. இந்த மூன்று நிறுவனங்களுக்கும் 53 சதவீதம் சந்தை பங்கு உள்ளது. சமீபத்தில் தான் இந்த நிறுவனங்கள் 1GB இணைய பயன்பாட்டுக்கு Rs.125 / சலுகை கட்டணம் என்று அறிவித்துவிட்டு தற்போது 1GB இணைய பயன்பாடு வழங்குவதற்கு -. ஐடியா மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்கள் முறையே Rs.154 மற்றும் Rs.155 செலுத்த வேண்டும், அதே நேரத்தில் கட்டணம் உயர்வுக்கு பிறகு, ஏர்டெல் வாடிக்கையாளர்கள், 1GB இணைய பயன்பாட்டுக்கு Rs.156 செலுத்த வேண்டும். மூன்று நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்தப்பட்டுள்ளதை பார்க்கும் போது கட்டண கொள்ளை அடிக்க உண்மையில் அவர்கள் மத்தியில் 'கூட்டணி' உருவாகிறது என்பதை நிரூபிக்கிறது.
Wednesday, October 16, 2013
Tuesday, October 15, 2013
ஆர்ப்பாட்டம்
மாபெரும் ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில்
பணிபுரியும்
நம் தோழரை மாறுதல் என்ற போர்வையில் அலைக்கழிக்க வெறிகொண்டு திரியும் NFTE சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்ற நினைக்கும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகத்தின்
போக்கை
கண்டித்து
17-10-2013 அன்று மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் விருதுநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
BSNL நிர்வாகம் 01-10-2013 முதல் உயர்ந்துள்ள 6.8 % IDA க்காண உத்தரவை வெளியிட்டுவிட்டது .உத்தரவை படிக்க: CLICK HERE
Monday, October 14, 2013
ஏர்டெல் சர்வதேச கட்டணம் உயர்வு
நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான ஏர்டெல், தனது சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த மாதம் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஐடியா நிறுவனமும் தனது சர்வதேச அழைப்புக்களின் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செய்யப்படும் அழைப்பிற்கு நிமிடத்திற்கு ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் நிமிடத்திற்கு ரூ.6.40 ஆக இருந்தது.
JAO பகுதி-II தேர்வு
நமது சங்கம் மீண்டும் இயக்குனர் (நிதி) அவர்களுக்கு JAO பகுதி-II தேர்வு முடிவுகளை கருணை மதிப்பெண்கள் வழங்குவதன் மூலம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது.
கடிதம் படிக்க:-Click Here
பேச்சுவார்த்தை
தேங்கி கிடக்கும் பிரச்சனைகள் விசயமாக நிர்வாகத்துடன் 11-10-2013 அன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை பயலின் புயல் பாதிப்புகளினால் நடைபெறாததால் 18-10-2013 அன்று பேச்சுவார்த்தை நடைபெறும்.
Sunday, October 13, 2013
Saturday, October 12, 2013
Friday, October 11, 2013
அமெரிக்க அரசு முடங்கியதால் என்ன என்ன பாதிப்புக்கள் ஒரு சிறப்பு பார்வை
அமெரிக்க அரசு முடங்கி இன்றோடு 10 நாட்கள் ஆகப் போகிறது. நாட்டின் அரசாங்கமே அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது. ஒவ்வொரு நாள் முடியும் போதும் ஏதாவது ஒரு சேவை செயலிழப்பதைப் பார்த்து வருகிறார்கள் மக்கள். ஆரம்பத்தில் இது சில நாட்களுக்குத்தான் என்ற நினைப்பிலிருந்தவர்கள், ஒரு வாரத்தைத் தாண்டியதுமே பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து வருகிறார்கள். ஆபத்துக்காலத்தில் மக்களுக்கு உதவ இயங்கும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் கூட, அரசுத் தரப்பிலிருந்து வரவேண்டிய நிதியுதவி இல்லாத காரணத்தால் முடங்கிப் போயுள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோட ஆரம்பித்துள்ளன. அரசின் ஆராய்ச்சிக் கூடங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் மிக முக்கியமான அமைப்பு, வானியல் ஆய்வு மையம். எங்கே எப்படிப்பட்ட புயல் தாக்கப் போகிறது என்பதை தெளிவாகக் கணித்து ஆபத்தைக் குறைக்கும் இந்த அமைப்பும் இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் புயல் தாக்கினால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யக் கூட வழியில்லை என அந்த அமைப்பின் தலைவர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். சம்பளமில்லாதால் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் திண்டாடுகின்றன. அன்றாட செலவுகளைச் சமாளிக்க முடியாமல் புலம்ப ஆரம்பித்துள்ளன.
நன்றி :-ONE INDIA
பேச்சுவார்த்தை
ஓடிசா பைலின் புயலினால் ஏற்பட்டுள்ள நிலைமை விசயமாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று மனிதவள இயக்குனர் திரு A.N.ராய் அவர்களுடன் நமது CMD அவர்களும் சென்றுவிட்டதால் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும்.
Thursday, October 10, 2013
விமான நிலையம் தனியார்மயம் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தின்போது விமான நிலைய ஆணை யகத்தின் 400 ஊழியர்கள் கறுப்பு உடை அணிந்து தங்கள் எதிர்ப்பைக்காட்டினர். அவர்கள் உள்நாட்டு விமான நிலையத்தில் முற்றுகையிட்டார்கள். மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படையினரின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் விமான நிலையத்தின் மையப் பகுதிக்குள் நுழைந்தார்கள்.பின்னர் அவர்கள் வாசல் முன்பாக அமர்ந்து தங்கள் போராட் டத்தை தொடர்ந்தனர்.இந்திய விமானநிலைய ஆணையகத்தின் உள் கட்டமைப்பின் தலைவர் அனுஜ் அகர்வால் அப் போது உள்ளே நுழைய முயன்றபோது அவரை உள்ளே செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது பதற்றம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் உதவிடன் அந்த அதிகாரி வேகமாக உள்ளே நுழைந்தார். திங்களன்று விமானநிலைய ஆணையகத்தின் 4 அதிகாரிகள் தில்லி யில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.அப்போது அவர்கள் ஊழி யர்களின் பணிக்கு பாதிப்பு வராது என உறுதியளித்தனர். மேலும் விமான நிலையத்தில் ஏலத்திற்கான துவக்க கட்ட ஏற்பாடுகளை பார்வையிடவும் அவர்கள் வந்திருந்தனர்.தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு விமான நிலையத்திற்கு ரூ2ஆயிரத்து 15 கோடி செலவிடுவது ஏன்? என்று ஊழியர்கள் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.சென்னை விமான நிலையத்தை தனியார் கைகளில் தருவதால் அதனைபயன்படுத்தும் விமானங்களுக்கான பயன்பாடு கட்டணத்தை அந்த நிறுவனம் வசூலிக்கும்.சென்னை விமான நிலையத்தை தனியார் கைகளுக்கு செல்லாமல் தடுக்கவேண்டும் என ஊழியர் சங்கத்தினர் மாநில அரசை அணுகிஇருக்கிறார்கள்.இந்திய விமான நிலைய ஆணையகம் அகமதாபாத், கொல்கத்தா மற்றும் கவுகாத்தி விமான நிலையங்களையும் தனியாரின் கைகளுக்கு தர வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது.
நன்றி :-தீக்கதிர்
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...