தோழர் கே.புளுகாண்டி நமது சங்கக் கொடியை ஏற்ற, தோழர் M.S.இளமாறன் கோஷங்கள் எழுப்ப, செயற்குழு இனிதே துவங்கியது. தோழர் L.தங்கதுரை வரவேற்ப்புரை நிகழ்த்தினார். மாவட்டத் துணை செயலர் Mமுத்துசாமி அஞ்சலித் தீர்மானத்தை வாசிக்க, மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் துவக்க உரை ஆற்றினார். SNEA மாவட்டத் துணை செயலர் திரு. R.கோவிந்தராஜன், SDOT, ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் தோழர் லட்சுமண பெருமாள் நகைசுவையுடன் இன்றைய ஆட்சியாளர்கள் பற்றி பேசினார். உழைக்கும் மகளிர் ஒருங்கினைப்பு குழு மாநில கனவீனர் தோழியர் V .P .இந்திரா சிறப்புரை நிகழ்த்தினார்.
சேவை மேம்பட்டுக் கருத்தரங்கை நமது மாவட்ட அமைப்பு செயலர் தோழர் A.கண்ணன், TTA தொடக்கஉரையாற்றித் தொடக்கி வைத்தார். இதில் நமது DGM திரு. s.ராதாகிருஷ்ணன், CAO (F) திரு. S.ஆழ்வார் சாமி மற்றும் திரு. R.தனுஷ்கோடி, AGM (Admin) ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கை தோழர் C.பழனிசாமி, மாநில உதவிச் செயலர் நிறைஉரையாற்றி முடித்து வைத்தார்.
தோழர் S.வெங்கடப்பன் நன்றி உரை நிகழ்த்த விரிவடைந்த மாவட்டச் செயற்குழு இனிதே நிறைவுற்றது. செயற்குழுவில் 211 தோழர்களும், ஒப்பந்த ஊழியர்கள் 10 பேரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment