Sunday, February 17, 2013

ஸ்பெயின்: வீடுகளை விட்டு வெளியேற்றும் சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்


சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்த நிலை காரணமாக ஸ்பெயின் நாட்டில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டது. இதன்காரணமாக வேலையிழந்த பலர் தாங்கள் வாங்கிய கடன் மற்றும் வங்கி லோன் மூலம் வாங்கிய வீடுகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறினர்.இதன்காரணமாக வங்கிகள் அடமான மற்றும் வெளியேற்ற சட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கானவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியது. இந்த கடுமையான சட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. முக்கிய நகரங்களான பார்சிலோனா, பாம்ப்லோனா, வாலென்சியா, செவில்லே உள்ளிட்ட நாட்டின் 50 நகரங்களில் ஒரே நேரத்தில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.வேலை இன்மையின் காரணமாக தங்களது அடமான தொகையை திருப்பி செலுத்த இயலாத 3,50,000 மக்களுக்கு 'வெளியேற்ற ஆணை 'யை  அடமான நிறுவனங்கள் வழங்கியுள்ளன. வேலையில்லா திண்டாட்டம் இளைய தலைமுறையினரையும் மிக மோசமாக பாதித்துள்ளது.வீட்டை காலி செய்த பின்னரும் அவர்கள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அடமானத்தில் இருப்பதால் வீடுகளை விற்க முடியாத நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அதனால், வீட்டை எடுத்துக்கொண்டு கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். காலியான வீடுகளை வாடகைக்கு விடவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.பிரதமர் மரியானோ ரஜொயின் தலைமையிலான அரசு நாட்டின் அடமான மற்றும் வெளியேற்ற சட்டத்தை திருத்தும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது. இந்த திருத்த நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற நீண்ட காலம் எடுக்கும் என்பதால், தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது அரசு உடனே ஏற்க வேண்டும் என்று மக்கள் கேட்டுள்ளனர்                                .நன்றி:- மாலை மலர்  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...