Tuesday, February 12, 2013

ஹெலிகாப்டர் ஊழல்


          இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த லஞ்சம் யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து விமானப் படை வாங்கியது. இந்த ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் (Finmeccanica) தலைவர் கிஸ்பி ஓர்சி, இதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் (Agusta Westland) தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை அந் நாட்டு அரசு இன்று கைது செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

          இந்தியாவைச் சேர்ந்த ராணுவ பிரிகேடியர் ஒருவர் மூலமாக இந்த இந் நிறுவனத்தின் தரகர்கள் பேச்சு நடத்தி, இந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்றுள்ளனர். பேரம் முடிவடைந்து ரூ. 3,546 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றது இத்தாலிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம். இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்ததையடுத்து ரூ. 470 கோடி அளவுக்கு இந்தியத் தரப்புக்கு லஞ்சமாகத் தந்துள்ளது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம். இந்தப் பணம் இந்தியாவில் யார், யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு இந்திய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் விரைவில் இந்த வழக்கை சிபிஐ வசம் மத்திய அரசு ஒப்படைக்கும் என்றும் கூறப்படுகிறது. தொடரும் ஊழல் ! தாங்குமா இந்திய தேசம் !
நன்றி : ONE INDIA

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...