1.டெலிகாம் மெகானிக் போட்டித்தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு :-
ஜெனரல் :40 வயது
OBC :43 வயது
SC : 45 வயது
இந்த வயது வரம்பை மேலும் தளர்த்த 30-01-2013 அன்று நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் நாம் வலியுறுத்தி உள்ளோம். நிர்வாகம் கவனமுடன் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.
2. நமது சங்க அங்கீகார காலத்தை நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி நமது மத்திய சங்கம் துணைமுதன்மை தொழிலாளர் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.
3. பிபரவரி மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு முறையான நோட்டீஸ் நிர்வாகத்திற்கு கொடுத்தாகிவிட்டது. இதில் BSNLEU, NFTE (BSNL ), TEPU ,SEWA BSNL, BSNLWRU, BTEU (BSNL), BSNL MS, ATM மற்றும் பல சங்கங்கள் கையெழுத்து இட்டுள்ளன.
4. JTO போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வெளியிட நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
No comments:
Post a Comment