மல்லி செக்யூரிட்டி நிறுவனம் விருதுநகர் மாவட்டத்தில் செக்யூரிட்டி பணிக்கான ஒப்பந்தத்தை கடந்த 01/12/2018 முதல் பெற்றது . ஜனவரி மாதம் காக்கிவாடன்பட்டியில் பல ஆண்டுகளாக பணி புரிந்த திருநாராயணன் என்பவரை திடீரென பணி நீக்கம் செய்தது .எரிச்சநத்தம் பகுதியில் வேலை பார்த்த மூர்த்தி என்பவரை காக்கிவாடன்பட்டிக்கு மாறுதல் செய்து அவர் இடத்திற்கு புதிதாக ஒருவரை நியமித்தது . ஒப்பந்ததாரர் மாறினாலும் அதில் பணி செய்யக்கூடியவர்களை மாற்றக்கூடாது என்பதற்கு நமது BSNLEU சங்கமும் TNTCWU சங்கமும் ஒரு கடுமையான போராட்டத்தை மாநில அளவில் நடத்தியபிறகு ஒரு ஒப்பந்தம் மாநில நிர்வாகத்தோடு ஏற்பட்டது .அந்த உடன்பாட்டை மல்லி செக்யூரிட்டி நிறுவனம் மீறுகிறது என்பதை பலமுறை மாவட்ட நிர்வாகத்தோடு விவாதித்தோம் .கடிதம் கொடுத்தோம் .ஒன்றும் பலன் இல்லை .நமது தமிழ் மாநில சங்கத்தின் ஆலோசனையுடன் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கடந்த 28/01/2019 அன்று துவங்கினர் . முதல் நாள் உண்ணாவிரதத்தின் முடிவில் காக்கிவாடன்பட்டி தோழர் திருநாராயணன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார் .ஆனால் மாவட்ட நிர்வாகம் நமது சங்கம் ஒரு நபர் பிரச்சனையை தான் சொன்னோம் என்று பிடிவாதமாக இருந்தது .மாநில சங்கத்தின் ஆலோசனையுடன் நமது இரண்டு நாள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தோம் .பிரச்சனை தீரவில்லை என்றால் நமது தமிழ் மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் 05/02/2019 முதல் உண்ணாவிரதத்தை தொடங்குவது என்று மாநில சங்கம் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துவிட்டது . அந்த அடிப்படையில் மாநில நிர்வாகம் பல முறை நமது சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியது . மாநில சங்கம் கொடுத்த கடுமையான நெருக்கடியின் பெயரில் இன்று மல்லி செக்யூரிட்டி நிறுவனம் நமது சங்கத்தோடு நமது அனைத்திந்திய உதவி செயலரும் நமது தமிழ் மாநில தலைவருமான தோழர் செல்லப்பா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது .ஒரு கடுமையான விவாதத்தை நமது அனைத்திந்திய உதவி பொது செயலர் நடத்திய பிறகு எரிச்சநத்தம் பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர் மூர்த்தி மீண்டும் இன்று பணியில் அமர்த்தப்பட்டார் . இப் பிரச்சனை தீர உதவிய நமது தமிழ் மாநில சங்கத்திற்கும் ,போராடிய அனைத்து தோழமைகளுக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியை மாவட்ட சங்கம் தெரிவித்து கொள்கிறது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment