Friday, February 8, 2019

06.02.2019 அன்று AUAB தலைவர்கள் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் அவர்களை சந்தித்தனர்

06.02.2019 அன்று AUAB தலைவர்கள் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் அவர்களை மீண்டும் சந்தித்தனர். 3ஆவது ஊதிய மாற்றம், 4G அலைக்கற்றை ஒதுக்கீடு, வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவற்றில் மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் அமலாக்கப்படாததற்கு தங்களின் ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் அவரிடம் தெரிவித்தனர். 3வது ஊதிய மாற்றம் மற்றும் ஊழியர்களின் இதர கோரிக்கைகளோடு, BSNLன் புத்தாக்கம் தொடர்பான பிரச்சனைகளிலும், தொலை தொடர்பு துறையால் எவ்வாறெல்லாம் தடைகள் ஏற்படுத்துப் படுகிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். ஊழியர்களின் ஊதிய மாற்ற பிரச்சனையில் AFFORDABILITY பிரிவிலிருந்து விலக்கு கோரும் அமைச்சரவைக் குறிப்பை தொலை தொடர்பு துறை இன்று வரை அனுப்பப்படாததற்கு தங்களின் கடுமையான ஏமாற்றத்தை தெரிவித்தனர். முக்கிய பிரச்சனையான ஊதிய மாற்றத்தில் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் பதில் சொல்வதை தவிர்த்தார். BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில், 05.02.2019 அன்று நடைபெற்ற டிஜிடல் கமிஷன் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்ததாகவும், இந்த பிரச்சனையை TRAIக்கு பரிந்துரைக்க கமிஷன் முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...