விருதுநகர் மாவட்ட AUAB சார்பாக பேரணி 15/02/2019 அன்று மாலை முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக துவங்கியது .இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர் .திரளாக பெண் தோழியர்களும் பங்கேற்றனர் .பேரணிக்கு முன்பாக போராட்ட விளக்க கூட்டம் AUAB தலைவர் தோழர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது .இதில் கோரிக்கைகளை விளக்கி தோழர் செந்தில்குமார் ,SNEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,AIBSNLEA மாவட்ட செயலர் ,ரவீந்திரன் ,BSNLEU மாவட்ட செயலர் ஆகியோர் பேசினர் .அதன் பின் முறையாக NFTE மற்றும் BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் ரமேஷ் மற்றும் சமுத்திரக்கனி அவரகள் பேரணியை துவக்கி வைத்தனர் .பழைய பேருந்து நிலையம் முன்பாக நிறைவு பெற்ற பேரணி ,அதன் பின் தெருமுனை பிரச்சாரமாக மாற்றப்பட்டு அதில் தோழர்கள் ரவீந்திரன்,சம்பத்குமார், செந்தில்குமார் ,சமுத்திரக்கனி ஆகியோர் உரை நிகழ்த்தினர் .தோழர் மணிகண்டன் நன்றி நவின்றார் .அதன் பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் AUAB கன்வீனர் தோழர் ரவீந்திரன் பேட்டியளித்தார் .


















No comments:
Post a Comment