Friday, February 7, 2014

ஒப்பந்தத் தொழிலாளர் சங்க அமைப்பு தினம்


          ஒப்பந்தத் தொழிலாளர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு மாநில சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க இரத்த தான முகாம் இன்றைய நாளில் நடத்த முடியாத சூழலில் 2014 பிப்ரவரி 16 ஆம் நாள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இன்று 16 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளிலும் வாயிற் கூடுகை திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் அருப்புக் கோட்டை, திருவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் கிளைகளில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிற கிளைகளான விருதுநகர், சிவகாசி மற்றும் இராஜபாளையம் ஆகிய கிளைகளில் ‘இரத்த நிறத்திலே, ஒத்த உணர்விலே தோழர்கள் கண்ட கொடி’யான TNTCWU கொடியேற்றப்பட்டது. அனைத்துக் கிளைகளிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

          மாவட்டம் முழுவதும் இந்த வாயிற்கூடுகை நிகழ்வில் TNTCWU  சார்பில் 55 பேரும் BSNLEU சார்பில் 60 பேரும் ஆக மொத்தம் 115 பேர் கலந்து கொண்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிகழ்வில் திரளாக கலந்து கொண்ட நிரந்தர ஊழியர்களுக்கு தங்கள் நன்றியறிதலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாவட்டச் சங்கம் உரித்தாக்குகிறது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...