Monday, February 10, 2014

மக்களை ஏமாற்ற படையெடுக்கும் விளம்பரங்கள்:

       காங்கிரஸ் ரூ 500 கோடி, பாஜக ரூ 400 கோடி, இதெல்லாம் என்ன? கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதையோ விற்கும் விலையா என்று கேட்காதீர்கள். இவை அந்தந்த கட்சிகள் மே மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முந்தைய விளம்பரங்களுக்கு செலவிட இருக்கும் தொகைகள். அதாவது, தேர்தல் திருவிழா தொடங்கப் போகிறதாம். காங்கிரஸ் தனது ரூ 500 கோடி ஒப்பந்தத்தை டென்ட்சு & டேப்ரூட்டு என்ற நிறுவனத்துக்கும், செய்தித் தொடர்பு பணிகளை ஜெனிசிஸ் பர்சன்-மார்ஸ்டெல்லருக்கும், வெளிப்புற விளம்பரங்களின் பொறுப்பை ஜேடபிள்யூடி-க்கும் கொடுத்துள்ளது. பாடலாசிரியரும் விளம்பரத் துறை நிபுணருமான பிரசூன் ஜோஷியின் மென்கேன் வேர்ல்ட் குழுமம் ரூ 400 கோடி மதிப்பிலான பாஜக கணக்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கான்டிராக்ட் அட்வர்டைசிங் என்ற நிறுவனமும் பாஜகவை பிடிக்கும் போட்டியில் உள்ளது. விளம்பரங்களை போடுவதற்கான பணியை தனியாக பிரித்து லோட்ஸ்டார் மற்றும் டபிள்யூபிபி-ன் குரூப் எம், சாம் பல்சாராவின் மேடிசன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படவுள்ளன.
          இந்தியத் தேர்தல்களில் கார்ப்பரேட் நன்கொடைகள்/ஊழல்கள் மூலம் திரட்டிய பணத்தை பயன்படுத்தி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக விளம்பரம் செய்து, கார்ப்பரேட் நலன்களுக்கான அரசாங்கத்தை பிடிக்க கட்சிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் ஆரம்பத்தில் நாம் பார்த்தது கட்சிகளை வாங்குவதற்கு முதலாளிகள் செலவழித்த தொகைகள்தான் என்று தெளிவாகிறது.
                   <நன்றி : funny tamil கார்ட்டூன் >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...