விருதுநகர் SDOP கிளை பொது குழு கூட்டம் இன்று அதன் தலைவர் சிங்காரவேலு தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் மாரிமுத்து சமர்ப்பித்த ஆயப்படுபொருளான வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி ,செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் மற்றும் அனைத்திந்திய மாநாட்டு நிதி ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன .விவாத பொருளை விளக்கி மாவட்ட உதவி செயலர்கள் தோழர் வெங்கடப்பன் ,ஜெயக்குமார் ,இளம் தோழர் அஷ்ரப் தீன் GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் , மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் ஆகியோர் பேசினர்.ஸ்தலமட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன .outdoor பணிக்கு விருப்பம் தெரிவித்து பணியில் சேர்ந்த பாஸ்கரன் போன்ற தோழர்கள் பாராட்டப்பட்டனர் .அதே போல் லாங் ஸ்டே மாறுதலில் எந்த முக சுளிப்பும் இன்றி இன்முகத்துடன் பணியில் சேர்ந்த தோழர் ராஜசேகரன் அவர்களும் பாராட்டப்பட்டார். வரும் 8, 9 தேதிகளில் நடைபெற உள்ள மேளாக்களில் அனைவரும் பங்கேற்பது ,ஆகஸ்ட் 10 ஆம் தேதி பேரணியில் முழுமையாக பங்கேற்பது ,செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது என்ற முடிவுடன் தோழர் முத்துராமலிங்கம் நன்றியுரையுடன் பொது குழு கூட்டம் நிறைவு பெற்றது .அனைத்திந்திய மாநாட்டு நிதியாக கீழ் கண்ட தோழர்கள் நன்கொடை வழங்கினர் .
தோழர் லட்சுமணன் ---------------------- RS .3000
தோழர் வெங்கடப்பன் -------------------- Rs 3000
தோழர் மாரிமுத்து ------------------------- Rs 2000
தோழர் மலைச்சாமி ----------------------- Rs 2000
தோழர் சிங்காரவேலு ---------------------Rs 1000
தோழர் லக்ஷ்மணன் -----------------------Rs 700
நன்கொடை வழங்கிய தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நன்றி .
.
No comments:
Post a Comment