மாவட்ட செயற்குழுவின் முடிவின் படி செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் 19/08/2016 அன்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகளில் எழுச்சியுடன் நடைபெற்றன .ராஜையில் தோழர் அனவ்ரதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட உதவி செயலர்கள் வெங்கடப்பன் ,ஜெயக்குமார்,தங்கதுரை ,மாவட்ட சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் ,மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட செயலர் ரவீந்திரன் ஆகியோர் செப்டம்பர் வேலை நிறுத்தத்தின் அவசியத்தை விரிவாக கூறினர் .கிளை செயலர் முத்துராமலிங்கம் நன்றி கூறி நிறைவு செய்தார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கூட்டத்தை தோழர் வெங்கடசாமி தலைமை தாங்கி நடத்தினார் .தோழர் சமுத்திரம் கிளை செயலர் நன்றி கூறி நிறைவு செய்தார் .
20/08/2016 அன்று சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்தை தோழர் அழகுராஜ் தலைமை வகிக்க தோழர்கள் முத்துசாமி மற்றும் கருப்பசாமி அவர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம் ,ஷண்முகவேலு ,முனியாண்டி ,மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட பொருளர் சந்திரசேகரன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி , SNEA சங்க தோழர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்
No comments:
Post a Comment