Tuesday, August 23, 2016

செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள்

தொடரந்து 3 வது நாளாக செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் பற்றி விளக்க கூட்டங்களை அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் மாவட்ட சங்கம் நடத்தியது .அருப்புக்கோட்டையில் கிளை தலைவர் உதயகுமார் தலைமைவகிக்க கிளை செயலர் தோழர் மதி கண்ணன்  முன்னிலை வகிக்க மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மற்றும் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் உரை நிகழ்த்தினர் .மாவட்ட சங்க நிர்வாகியும்,கிளை பொருளருமான தோழர் அஷ்ரப் தீன் நன்றி கூறி முடித்து வைத்தார் .மாவட்ட உதவி செயலர்கள் தோழர் ஜெயக்குமார் ,வெங்கடப்பன் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவி தலைவர் தோழர் முனியசாமி ,கிளை செயலர் தோழர் செந்தில் ,முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகிகள் சோலை மற்றும் சிங்காரவேலு ஆகியோரும் கலந்து கொண்டனர் .
  
விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தை தோழர் சந்திரசேகரன் தலைமை வகிக்க தோழர் இளமாறன் முன்னிலை வகிக்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் வேலை நிறுத்த விளக்க உரைநிகழ்த்தினார்.AIBSNLEA மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் மற்றும் CITU தோழர் முருகன் ஆகியோர்  வாழ்த்தி பேசினர்.  .    .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...