PLI போராட்டங்களின் தொடர் வெற்றி
டெல்லி
மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு
PLI வழங்க கோரி நமது சங்கத்தின் சார்பில் 01/04/2016 அன்று ஆர்பாட்டங்களையும்
07/04/2016 அன்று தர்ணா போராட்டங்களையும் நாடு முழுவதும் நடத்தியதைத் தொடர்ந்து ஊழியர் சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் நடுவே 03/08/2016 அன்று டெல்லி மத்திய மண்டல தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தையை நடத்தினார். பேச்சுவார்த்தையில் நமது சங்கத்தின் துணை பொது செயலாளர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தியும், புரவலர் தோழர் VAN.நம்பூதிரியும் கலந்து கொண்டார்கள். நிர்வாகம் சார்பில் A.M.குப்தா, பொது மேலாளர் (SR) அவர்கள் கலந்து கொண்டார்.
PLI பார்முலா இறுதி செய்யப்படாததால் நிர்வாகம் ஊழியர்களுக்கு 2014-2015 ஆம் ஆண்டிற்கான தற்காலிக குறைந்தபட்ச PLI ஆக ரூபாய் 7000/- அளிக்க மறுத்து விட்டதாக நமது சங்க பிரதிநிதிகள் கடுமையாக வாதாடினர். மேலும் 29/03/2016 அன்று மாலையில் சங்கத்திற்கு
வாய்மொழியாக தகவல் கொடுத்துவிட்டு, கூட்டத்திற்கு வர இயலாத நிலைமையை நமது சங்கம் தெரிவித்து முறையான கால அவகாசத்துடன் கூட்டத்தை நடத்துமாறு நிர்வாகத்தை கேட்டு கொண்ட பிறகும் கூட 30/06/2016 அன்று அவசர அவசரமாக நிர்வாகம் கூட்டத்தை நடத்தியது குறித்து நமது சங்க தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.
குறைந்தபட்ச PLI ஆக ரூபாய் 7000/- வழங்கப்படவேண்டும் என்ற
உத்தரவு இருந்த போதும் 2 இலக்க தொகையை நிர்வாகம் தர முன் வந்ததாகவும் ஊழியர்களை பாதிக்கின்ற மிக பெரிய பிரச்சனையில் பிரதான அங்கீகார சங்கத்தின் கருத்துக்களை முன் வைக்கும் வாய்ப்பை மறுத்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியதாகவும் தெரிய வருகிறது. நிர்வாக தரப்பில் இதற்க்கு உரிய பதில் அளிக்க இயலவில்லை. எனவே ஊழியர்களுக்கு PLI வழங்கும் பிரச்சனையில் 31/08/2016க்கு முன்னதாக தீர்வு காணுமாறு நிர்வாகத்திற்கு டெல்லி மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். மேலு ம் அக்டோபர் 2016 முதல்
பண்டிகை காலம் துவங்குவதால் விரைவில் தீர்வு காணுமாறு நமது சங்கம் கேட்டதின் அடிப்படையில் நிர்வாகத்திற்கு மேலும் கால அவகாசம் கொடுக்க முடியாது என தொழிலாளர் நல ஆணையர் தெளிவுபடுத்தி உள்ளார். அடுத்த கூட்டம் 31/08/2016 அன்று
நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment