திரிணாமுல் காங்கிரஸ்
குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து கிளைகள்தோறும் ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க மாநிலம் கல்கத்தா மத்திய தந்தி அலுவலகத்தில் செயல்பட்டுவரும்
BSNL ஊழியர் சங்க அலுவலம் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டது. அலுவலக
உபகரணங்கள், மின்விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன் அலுவலகத்தில்
பணிபுரியும் BSNLEU தோழர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது
BSNL சொத்துக்களை நாசப்படுத்தும் தாக்குதலாகவும் இருக்கிறது. ஆனால், ஆச்சர்யப்படும்
விதமாக மேற்கு வங்க முதன்மைப் பொது மேலாளர் இந்த வன்முறையாளர்கள்மீது தாக்குதல் தொடர்பாக
எந்த FIRம் தாக்கல் செய்யவில்லை.
திரிணாமுல் குண்டர்களுக்கு மேற்கு வங்க முதன்மைப் பொது மேலாளர் மறைமுகமாக
ஆதரவளிக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயம் BSNLன் முதன்மை
மேலாண்மை இயக்குநரின் (CMD) கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் தகுந்த நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளால். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இப்படியான
சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் இந்த வன் செயலைக் கண்டித்து 24.08.2016ல்
ஆர்ப்பாட்டம் நடத்தும்படி மத்திய சங்கம் வழிகாட்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில்
24.08.2016 அன்று
கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்
No comments:
Post a Comment