அருப்புகோட்டை TNTCWU கிளையின் மாநாடு தோழர் சோலை தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் பெத்தணன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க தியாகிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளை செயலர் தோழர் .செந்தில்குமார் சமர்ப்பித்த செயல்பாட்டு அறிக்கை மற்றும் தோழர். ராமசந்திரன் சமர்ப்பித்த நிதியறிக்கை ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது.
விவாத அரங்கில் தோழர்கள் அஷ்ரப்தீன், கண்ணன் கிளையை இன்னும் செழுமை படுத்த வேண்டிய விசயங்களையும் பகிர்ந்தனர். BSNLEU மாவட்ட செயலர் தனது உரையில் அருப்புகோட்டை கிளை சங்கம் கடந்த செப்-2 வேலைநிறுத்தத்தில் 100% பங்கேற்றமைக்கும், அருப்புகோட்டை வட்டத்தில் கேபிள் பழுதுகளைச் சரிசெய்வதில் நமது ஒப்பந்த ஊழியர்கள் சிறப்பான பங்களிப்பதற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். வர உள்ள மாவட்ட மற்றும் அனைத்திந்திய மாநாட்டு வேலைகளை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார்.
மாநாட்டில் பெண் ஊழியர்கள். உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கிளை மாநாட்டில் தலைவராக தோழர் பெரியசாமி, செயலராக தோழர் செந்தில் பொருளாளராக தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளர் தோழர் ராமச்சந்திரன் (ராஜிவ் நகர்) நன்றி கூறினார். மாநாட்டிற்கான சிற்றுண்டிச் செலவை LCM, உறுப்பினர் தோழர் ஜெயக்குமார் ஏற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment