Sunday, September 13, 2015

அதானி குழும ஆட்களை அடித்து உதைத்து விரட்டிய கிராம மக்கள்!

ஊரணியை அழித்த அதானி குழுமம் 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை அதானி குழுமத்தினர் தமிழக அரசுடன் செய்து கொண்டுள்ளனர். இதனடிப்படையில், கமுதி தாலுகாவில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் துவக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இதை தொடர்ந்து கடந்து சில மாதங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த திட்டத்திற்காக அதானி குழுமத்தினர் விளைநிலங்களை மோசடியாக பதிவு செய்து அபகரிப்பதாகவும், இறந்தவர்கள் பெயர்களிலும், உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகவும் காட்டி விவசாய நிலங்களை மோசடியாக பதிவு செய்வதாகவும், இதற்கு அரசு அதிகாரிகளும் ஆதரவாக இருப்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது.கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட செங்கப்படை, தாதாகுளம், கீழமுடி மன்னார்கோட்டை, புதுக்கோட்டை போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், பஞ்சமி நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், நீர்வரத்து வாய்க்காள்கள் என சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை அதானி குழுமத்தினர் சுற்றி வளைத்திருப்பதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதனிடையே செந்தனேந்தல் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் செட்டி ஊரணி, பேய் ஊரணி ஆகியவற்றை நேற்று மாலை அதானி குழும வேலையாட்கள் ஆக்கிரமித்து புல்டோசர் மூலம் சம படுத்த துவங்கியுள்ளனர். இதில் ஒரு ஊரணியில் முக்கால் பகுதி சமபடுத்தப்பட்ட நிலையில், அந்த கிராம மக்களுக்கு இது பற்றிய தகவல் தெரிந்துள்ளது. இதையடுத்து, அங்கு திரண்ட கிராம மக்கள் அதானி குழும ஆட்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஊரணிக்கு சென்றனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலை ஆட்களை அடித்து உதைத்து அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
                      நன்றி :- விகடன் செய்திகள் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...