06-09-2015 அன்று நமது மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் வெம்பகோட்டையில் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட துணை செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்களின் இல்ல விழாவை ஒட்டி நடைபெற்ற இச் செயற்குழுவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தோழர் வெங்கடேஷ் செய்ததற்கு மாவட்ட சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது . குறுகிய கால அவகாசத்தில் நடைபெற்ற செயற்குழுவிற்கு 4 பேர் தவிர அனைவரும் கலந்து கொண்டனர் .தோழர் இளமாறன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பட்டது .மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மேல் விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் நமது சங்க உறுப்பினர்களில் 185 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் .சதவிகத அடிப்படையில் 82% . இது வரை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் நமது உறுப்பினர்கள் பங்கேற்றதில் இது தான் அதிகம் என்பதை மாவட்ட செயற்குழு கரவொலி எழுப்பி பாராட்டியது . செப்டம்பர் 12 ஆம் தேதி ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மகாநாடு நடைபெற உள்ளது .அம் மகாநாட்டில் நமது செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டும் செயற்குழு முடிவு செய்தது .அதே தினம் ESI அட்டை வழங்குவதற்கு ஒப்பந்ததாரர் ஏற்பாடு செய்துள்ளதையும் அனைவரும் குடும்பத்தோடு வந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற செய்தியையும் அதில் தெரிவித்து உள்ளோம் .ஒப்பந்த ஊழியர் அனைத்திந்திய மகாநாட்டு நிதி வசுலை சாத்தூர்,ராஜபாளையம் கிளைகள் முடித்துவிட்டன .அதே போல் மற்ற கிளைகளும் மாவட்ட மாநாட்டுக்கு முன்பாக முடித்து விட வேண்டும் என மாவட்ட செயற்குழு கேட்டு கொண்டது . தோழர் சிவஞானம் நன்றி கூற மாவட்ட செயற்குழு நிறைவு பெற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment