Wednesday, September 2, 2015

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம்



விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து பகுதி நேர ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2 ஆம் தேதி, அதாவது நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அச்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.இதனையடுத்து மத்திய அரசு சார்பில் இது தொடர்பாக தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த சுமூக முடிவும் எட்டப்பட வில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய அளவில் 10 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியின் தொழிற்சங்க பிரிவான பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.வங்கிப்பணிகள் பாதிக்கும்.தொழிலாளர் சட்டத்தில் திருத்தப்பட்ட தொழிலாளர் விரோத சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பங்கு விலக்கலை நிறுத்த வேண்டும் மற்றும் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் நாளை நடக்கும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார்கள். எனவே நாளை நாடெங்கும் வங்கி சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வங்கிகளில் நாளை காசோலை பரிவர்த்தனை நடைபெறாது என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தனியார் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும். சென்னையில் வங்கி ஊழியர்கள், நாளை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் நாளைய வேலை நிறுத்த போராட்டத்தில், 1.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தமிழக அரசு ஊழியர்கள் சங்கமும் பங்கேற்கிறது. காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.தமிழ்நாட்டில் 2 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இதில் லாரி டிரைவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டட தொழிலாளர்கள் என சுமார் 50 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி தெரிவித்துள்ளார். ஆட்டோக்கள் ஓடாது 

அதேப்போன்று நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் எம்.சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வர உள்ள போக்குவத்து பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் பிரச்னைக்கு முத்தரப்பு கமிட்டி அமைத்து தீர்வு காண வேண்டும்.ஜி.பி.எஸ். மீட்டரை இலவசமாக தர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாக்சிகள், கால் டாக்சிகள் ஓடாது" என்றார்.இதனால் நாளை சென்னையில் 90 சதவீத ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிகிறது. இதனிடையே ஆட்டோ தொழிற்சங்கத்தினர் நாளை போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் சென்ட்ரல், பல்லவன் சாலை, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதேப்போன்று தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற உள்ளது.
                நன்றி "- விகடன் செய்திகள் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...