Wednesday, September 16, 2015

தர்ணா போராட்டம்

FORUM சார்பாக விருதுநகர் மாவட்டத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 6வரை தர்ணா போராட்டம் நடைபெற்றது .NFTE சங்க மாவட்ட செயலர் தோழர் .R சக்கணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தர்ணாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் . தோழர் சக்கணன் அவர்கள் தன் தலைமை உரையில் நமது ஒற்றுமையை வலிமைப்படுத்தி இயக்கங்களில் நமது ஊழியர் பங்களிப்பை அதிகபடுத்த வேண்டும்  என்று கூறினார் .தர்ணா போராட்டத்தை BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கிவைத்து பேசுகையில் இந்த அரசு திட்டமிட்டு BSNL நிறுவனத்தை நலிவடைய செய்யும் முயற்சியே 20000 கோடி மதிப்பில் ஆன டவர்களை பிரித்து தனி நிறுவனம் ஆக்குவது மற்றும் பங்கு விற்பனை செய்யப்பட்ட MTNL நிறுவனத்தை வரும் டிசம்பர் மாதம் நம் நிறுவனத்தோடு இணைப்பது என்பதை நடைமுறைபடுத்துவது  என்பதை விரிவாக விளக்கி பேசினார் .நமது கட்டமைப்பை மேம்படுத்தாமல் நமது நிறுவனம்  42000 கோடி வருவாயை வரும் 2017-2018 ஈட்டும் என்பது மிகைபடுத்தப்பட்ட ஒன்று என்பதையும் அவர் சுட்டி கட்டினார் . தர்ணாவில் பேசிய இளைய தோழர்கள் ஜேசுராஜா ,கோபிநாத் ,கேசவன் ஆகியோர் புதிய உணர்வோடு போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியத்தை கூறியது  தர்ணா போராட்டத்திற்கு மெருகூட்டியது .SNEA , மாவட்ட செயலர் தோழர் செல்வராஜ் , திரு மாரியப்பன் ,AGM, திரு ராஜகோபால் ,AGM, ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள் அய்யாசாமி மற்றும் பெருமாள்சாமி ,BSNLEU மாவட்ட தலைவர் சமுத்திரகனி , பவுண்ராஜ் NFTE ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர் .இறுதியாக AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் இந்த டவர் நிறுவனம் உருவாகுவது என்பது உடனடியாக  நடைபெறவில்லை .இதற்கான முயற்சி பல வருடங்களாக நடைபெற்று வருவதையும் ,1990-91 இல் புதிய பொருளாதார கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டவுடன் நடை பெறும்  நிகழ்ச்சியின் ஒரு பகுதி தான் இது என்பதை உதாரணங்களுடன் கூறினார் . தொடர் போராட்டங்களின் விளைவாக நமது BSNL நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக காப்பாற்றபட்டு உள்ளதையும் ,கடும் நஷ்டத்தில் உள்ள போது கூட அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் TTA தோழர்களின் ஊதிய இழப்பு பிரச்சனையில் ஒரு சின்ன முன்னேற்றம் ஆகியவற்றை தன பேச்சில் குறிப்பிட்டார் .தோழர் இளமாறனின் அதிரடி கோஷங்களுடன் ஒரு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தோடு  தர்ணா போராட்டம் நிறைவு பெற்றது .































No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...