நமது BSNL நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் மையக்குழு இன்று (22-07-2013) CMD அவர்களை சந்தித்து கீழ் கண்ட பிரச்சனைகளை விவாதித்து உள்ளது.
- 1. டவர் பராமரிப்பு பகுதியில் டீசல் மற்றும் மின்சார பிரச்சனையால் அடிக்கடி பழுது ஏற்படுவதால் நமது சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
- 2. தேவையற்ற பொருட்களை ஏலம் விட தாமதம் செய்வதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
- 3. காலியாக உள்ள நமது அலுவலகங்கள், குடியிருப்புகள்,பயிற்சி மையங்கள் ஆகியவற்றை வாடகை மற்றும் ஒத்தி அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களுக்கு விடுவது.
- 4. டெலிகாம் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி புதிய பொறியாளர்களை தேர்ந்து எடுத்து புதிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டும். 1000க்கும் மேற்பட்ட டவர்கள் உற்பத்தி செய்யப்பட்டு தொழிற்சாலைகளில் கையிருப்பாக இருக்கும் போது பல SSAக்களில் தனியாரிடம் இருந்து டவர்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
- 5. மார்க்கெட்டிங் பகுதியில் மேலும் கூடுதலாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வலிமைப்படுத்த வேண்டும்.
- 6.போதுமான உபகரணங்களை (கேபிள், டெலிபோன் ) உடனடியாக வாங்க வேண்டும்.
- 7. வொர்க் கமிட்டியை குறிப்பிட்ட தேதிகளில் நடத்தி அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க வேண்டும். நமது CMD மேற்கூறிய பிரச்சனைகளை கவனிப்பதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment