நாட்டில் வறுமை விகிதம் குறைந்துவிட்டதாக திட்டக்குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. கிராமப்புறங்களில் 27 ரூபாய்க்கு அதிகம் செலவு செய்பவர்களும், நகர்ப்புறங்களில் 32 ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று திட்டக்குழு கூறியுள்ளது.திட்டக்குழு துணை தலைவருக்கு 32 ரூபாயை கொடுத்து டெல்லியில் ஒரு நாள் செலவு செய்து பார்க்க சொன்னால் தெரியும்?கழுதையைக் குதிரை என்று அழைப்பதால் அது குதிரையாகிவிடாது. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது. ஏழ்மையை ஒழிக்கத் தெரியவில்லை. ஏழைக்கான இலக்கணத்தை மாற்றி எழுத நினைக்கிறார்கள் மேதாவிகள்.வறுமைக் கோடென்ன கரும்பலகைச் சாக்பீஸ் கோடா, நினைத்தால் வரையவும், தேவைப்பட்டால் அழிக்கவும் செய்வதற்கு? புள்ளிவிவரங்கள் கிடக்கட்டும்.
நன்றி :- தினமணி
No comments:
Post a Comment