நமது சங்கத்தில் புதிதாக தன்னை முழுமனதுடன் இணைத்துக் கொண்ட கல்லூரணி TM தோழர் கணேசன் அவர்களை மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் கௌரவித்தார்.
சிறப்புரையாக பேசிய மாநில அமைப்பு செயலர் தோழர் ஜெயமுருகன் தன்னுடைய உரையில் 78.2 IDA இணைப்பு வெற்றியில் BSNLEU சங்கத்தின் மகத்தான பங்களிப்பை கோடிட்டு வரஇருக்கின்ற போராட்ட திட்டங்களை விரிவாக விளக்கினார். BSNLEU சங்கம் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றது சாதாரண விஷயம் கிடையாது. எந்த அரங்கிலும் எந்த தொழிற்சங்கமும் அடையாத கின்னஸ் சாதனை நமது வெற்றி என்று அவர் கூறினார். மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி பேசுகையில் நமது மாவட்டத்தில் நம்சங்கம் இல்லாமல் எந்த ஒரு நடவடிக்கையும் யாராலும் எடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டினார். தோழர் A.கண்ணன், தோழர் C.சந்திரசேகரன் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோரும் மகாநாட்டில் உரையாற்றினர். தோழர்கள் U.B.உதயகுமார், R.ஜெயக்குமார் மற்றும் A.சோலை ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment