Thursday, March 28, 2013

விருதுநகரில் BSNLEU தலைவர்கள் முழக்கம்

          விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் 28-03-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி தலைமை தாங்க தோழர் M.பெருமாள்சாமி, மாவட்ட உதவி செயலர் சங்கக் கொடி ஏற்ற செயற்குழு இனிதே துவங்கியது. அஞ்சலி தீர்மானத்தை தோழர் M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர் வாசிக்க, தோழர் M.S.இளமாறன், GMO கிளைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

          செயற்குழுவை மாவட்டச் செயலர் தோழர் S.ரவீந்திரன் முறையாக தொடக்கி வைத்தார். SNEA, மாவட்டச் செயலர திரு. G.செல்வராஜ், SDE, திரு.T.ராதாகிருஷ்ணன், SR. AO, AIBSNLEA மாநில பொறுப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தோழர் செல்லப்பாண்டியன், TEPU சங்க மாநிலச்  செயலர் அவர்கள் பேசும் போது சரிபார்ப்பு தேர்தலில் நமது பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பேசினார்.

          நமது மாநில செயலர் தோழர் S .செல்லப்பாவும், நமது பொது செயலர் .P.அபிமன்யுவும் இன்றைய BSNL நிலைமைக்கு யார் கரணம் என்பது பற்றியும், நிதி பற்றாகுறை உள்ள சூழ்நிலையிலும் நாம் சாதித்த சாதனைகளை விளக்கி, 6ஆவது சரிபார்ப்புத் தேர்தலில் 50% வாக்குகள் பெற்று நாம் முழுமுதற் சங்கமாக வருவோம் என்று எழுச்சியுரையாற்றினர்.

          வருகின்ற சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் 50% ஓட்டுகளுக்கு மேல் வாங்குவதற்கு வாய்புகள் பிரகாசமாய் உள்ளதை செயற்குழுவில் கலந்து கொண்ட பெரும் திரளான ஊழியர் கூட்டம் வெளிச்சமிட்டு காட்டியது. சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கில் கலத்து கொண்ட DGM (FIN &IFA ) திரு. S.ஆழ்வார்சாமி அவர்கள் BSNL நிறுவனத்தை முனனேற்ற நமது BSNLEU சங்கம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.

          மாவட்டம் முழுவதும் இருந்து 230க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டது பெருமைக்குரியது. இதற்காக பாடுபட்ட அனைத்து தோழர்களையும் மாவட்ட சங்கம் பாராட்டை உரித்தாக்குகிறது.

சில காட்சிப் பதிவுகள் இங்கே...

பதிவுகள் தொடரும்....































No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...