Thursday, March 28, 2013

பன்னாட்டு கம்பெனியின் பகாசுர வரி ஏய்ப்பு

 வரி ஏய்ப்பு 
          நோக்கியா செல்போன் நிறுவனம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக்கூறி, வருமான வரித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையை நடத்திவருகிறது. அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, வருமானவரித்துறையினர் கடந்த ஜனவரி மாதம் நோக்கியா நிறுவன அலுவலகங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். செல்போன் விலைகளை குறைத்துகாட்டி, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முழுதையும் விரைவில் செலுத்துமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் வரிஏய்ப்பு புகாரை நோக்கியா நிறுவனம் வழக்கம்போல் மறுத்துள்ளது.

          இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக சுமார் மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. வோடபோன் நிறுவனத்தை தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தின் வரிஏய்ப்பைப் பார்க்கும்போது பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியா மாறும் அவல நிலையை ஆளும் அரசாங்கம் திட்டமிட்டு செய்வதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...